தமிழ்நாடு

விரைவில் தமிழகத்திலேயே 02, தடுப்பூசி உற்பத்தி செய்ய திட்டம்: 45 நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்ததாக தகவல்!

ஆக்சிஜன் தடுப்பூசிகள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் தமிழ்நாட்டிலேயே உற்பத்தி செய்ய 45 நிறுவனம் விருப்பம் தெரிவித்துள்ளதாக தமிழக அரசு சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு, அத்தியாவசியமாக தேவைப்படும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்கக்கூடிய வகையில் நிரந்தர தீர்வாக நம் மாநிலத்திலேயே ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை துவங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை பிறப்பித்தார்.

அதுமட்டுமின்றி, மருத்துவ உயர் தொழில்நுட்ப சாதனங்கள், ஆக்சிஜன் செறிவூட்டிகள், தடுப்பூசிகள் மற்றும் கொரோனா தொடர்பான மருந்துகள் உற்பத்தியை நம் மாநிலத்திலேயே உருவாக்குவதற்கும், தொழில் கூட்டு முயற்சிகளை உருவாக்குவதற்கும் உத்தரவிடப்பட்டிருந்தது.

விரைவில் தமிழகத்திலேயே 02, தடுப்பூசி உற்பத்தி செய்ய திட்டம்: 45 நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்ததாக தகவல்!

இதனடிப்படையில் தொழில் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (TIDCO), அத்தியாவசிய பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு ஆதரவையும், உதவிகளையும் அளிக்கும் என்றும் குறைந்தபட்சம் 50 கோடி ரூபாய் முதலீடு செய்யும் நிறுவனங்களுடன் டிட்கோ நிறுவனம் கூட்டாண்மை அடிப்படையில் இவ்வாலைகளை நிறுவுவதற்கு விருப்பமுள்ள இந்திய மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து விருப்ப கருத்துக்களை கேட்டிருந்தது.

இந்த நிலையில், தற்போது வரை 45 இந்திய மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்து உள்ளதாக தமிழக அரசு சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்கள் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு ஆக்சிஜன், தடுப்பூசி, மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் உற்பத்தி உட்கட்டமைப்புகளை விரைவில் நிறுவிட தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

banner

Related Stories

Related Stories