தமிழ்நாடு

சென்னை மாநகராட்சிக்கு 80 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கிய தி.மு.க எம்.பி., எம்.எல்.ஏக்கள்!

சென்னை மாநகராட்சி ஆணையரிடம் தி.மு.க எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கினர்.

சென்னை மாநகராட்சிக்கு 80 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கிய தி.மு.க எம்.பி., எம்.எல்.ஏக்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழக அரசின் தீவிர கொரோனா தடுப்பு நடவடிக்கையால், தமிழகத்தில் தற்போது ஆக்சிஜன் தட்டுப்பாடே இல்லை என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காகத் தன்னார்வலர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் என்று பல்வேறு தரப்பினரும் உபகரணங்கள் வழங்கி உதவி வருகின்றனர்.

இந்நிலையில் மத்திய சென்னை எம்.பி தயாநிதி மாறன், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின், திரு.வி.க நகர் தொகுதி எம்.எல்.ஏ தாயகம் கவி ஆகியோர் இணைந்து 80 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கினர்.

சென்னை ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில், மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடியிடம் வழங்கப்பட்டது.

சென்னை மாநகராட்சியின் கொரோனா தடுப்பு நடவடிக்கையால் சென்னை தொடர்ந்து தொற்று எண்ணக்கை வேகமாக குறைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories