தமிழ்நாடு

‘தெரியாம சொல்லிட்டேன்’ : சிவகார்த்திகேயனிடம் மன்னிப்பு கேட்ட குட்டி சாவர்க்கர் ஹெச்.ராஜா!

சிவகார்த்திகேயன் தந்தை விவகாரத்தில் பா.ஜ.க மூத்த தலைவர் எச்.ராஜா மன்னிப்பு கோரினார்.

‘தெரியாம சொல்லிட்டேன்’ : சிவகார்த்திகேயனிடம் மன்னிப்பு கேட்ட குட்டி சாவர்க்கர் ஹெச்.ராஜா!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழகத்தில் மத கலவரத்தை ஏற்படுத்த சங்-பரிவார் மற்றும் இந்துத்வா கும்பல் அவ்வபோது பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதற்கு அடிதளம் போடும் வகையிலேயே பா.ஜ.க தலைவர்களின் பேச்சுகள் பெரும்பாலும் அமையும்.

அதிலும் குறிப்பாக, பா.ஜ.க மூத்த தலைவர் எச்.ராஜா பேச்சுக்கள் விஷமத் தன்மையுடன் இருக்கும் என்பது அவரின் பேச்சுக்கள் மூலமே தெரிந்துக் கொள்ளாலாம். கொரோனா தொற்றுக் காலத்தில் மக்களை காக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதேவேளையில், தமிழக அரசின் தடுப்பு நடவடிக்கை மற்றும் பல்வேறு முயற்சிக்கு அரசியல் கட்சிகளும், அதன் கட்சித் தலைவர்களுமே முழு ஆதரவு அளித்து வரும் நிலையில், பா.ஜ.கவும் அதன் தலைவர்களும் வன்முறையை தூண்டிவிட்டு குளிர்காயம் வேலையை தொடர்ச்சியாக செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

‘தெரியாம சொல்லிட்டேன்’ : சிவகார்த்திகேயனிடம் மன்னிப்பு கேட்ட குட்டி சாவர்க்கர் ஹெச்.ராஜா!

அந்தவகையில் சமீபத்தில் பா.ஜ.கவின் மூத்த தலைவர் எச்.ராஜா பேச்சால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. அதாவது சமீபத்தில் பா.ஜ.க மூத்த தலைவர் எச்.ராஜா அளித்த பேட்டி ஒன்றில், நடிகர் சிவகார்த்திகேயனின் தந்தை இறப்புக்கும் பாபநாசம் எம்.எல்.ஏ-வாக இருக்கும் மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லாவுக்கும் தொடர்பு இருப்பதுபோல பேசினார்.

எந்தவித ஆதராமல் இல்லாமல் பேசி திரிந்த எச்.ராஜா மீது மனிதநேய மக்கள் கட்சியின் வழக்கறிஞர் பிரிவு சார்பில் டி.ஜி.பி அலுவலகத்தில் நேற்று புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரின், “சிவகார்த்திகேயனின் தந்தையான ஜெயிலர் தாஸ், மாரடைப்பால் 19 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். எச்.ராஜா வேண்டுமென்றே ஜவாஹிருல்லாவின் பெயரை கெடுப்பதற்காக பொய்யான கருத்துகளை பரப்புகிறார்.

சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் மோதலை ஏற்படுத்தும் வகையில்கருத்து தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் மனிதநேய மக்கள் கட்சி சார்பாக எச்.ராஜா மீது புகார் கொடுக்கப்பட்டு வருகிறது. சிவகார்த்திகேயனும் தலையிட்டு எச்.ராஜா மீது புகார் தரவேண்டும்” எனத் தெரிவித்திருந்தனர்.

‘தெரியாம சொல்லிட்டேன்’ : சிவகார்த்திகேயனிடம் மன்னிப்பு கேட்ட குட்டி சாவர்க்கர் ஹெச்.ராஜா!

அதனைத் தொடர்ந்து பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்த நிலையில், சிவகார்த்திகேயன் தந்தையின் பெயரை தவறுதலாக கூறிவிட்டேன் என வருத்தம் தெரிவித்துள்ளார் எச்.ராஜா. இதுதொடர்பாக எச்.ராஜா கூறுகையில், “ நடிகர் சிவகார்த்திகேயன் தந்தையும் காவல்துறையில் இருந்தவர்.

அதனால் தவறுதலாக அவர் பெயரை கூறி விட்டேன். அது என் தவறுதான். அவருக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற எந்த உள்நோக்கமும் எனக்கு கிடையாது. இதற்காக நான் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க தலைவர்கள் பலரும் ஒரு அவதூரு கருத்துகளை கூறி விட்டு, பின்னர் அது பெரும் சர்ச்சையான பிறகு தான் தெரியாமல் கூறிவிட்டேன், வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறுவதையும் வாடிக்கையாக வைத்துள்ளனர். அதிலும் பா.ஜ.க மூத்த தலைவர் எச்.ராஜா நீதிமன்றத்தையே அவதுறாக பேசிய நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் என்பது குறிப்பிட்டத்தக்கது.

banner

Related Stories

Related Stories