தமிழ்நாடு

மதுரையில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் போலிஸாருக்கு, நுரையீரலை பாதுகாக்க மூச்சுப்பயிற்சிகள்!

கொரோனா பெருந்தொற்று காலத்தில் காவல்துறையினரின் உடல்நலம் பேணும் உன்னத பயிற்சிகளை மதுரை மாநகர காவல்துறை மேற்கொண்டுள்ளது.

மதுரையில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் போலிஸாருக்கு, நுரையீரலை பாதுகாக்க மூச்சுப்பயிற்சிகள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கொரோனா ஊரடங்கு காலத்தில் அதிகமாக காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் அவர்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

இந்நிலையில், காவல்துறையினரின் உடல்நிலையை கருத்தில் கொண்டு, மதுரை மாநகரக் காவல்துறை, பிசியோதெரபி ஆலோசகரான திவாகர் என்பவர் மூலம் போலிஸாருக்கு நான்கு வகையான மூச்சுப் பயிற்சி அளித்து வருகிறது.

மதுரை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தின் இரண்டாவது மாடியில், காவல்துறையினருக்கு, கழுத்து, முழங்கால் வலி, பேக்பெயின், முதுகு வலி, போன்ற சிறுசிறு உபாதைகளையும் போக்கும் வகையில் நாய் போன்று மூச்சு வாங்குவது போன்ற பயிற்சி அளிக்கப்பட்டது. அதேபோல், குதிகால் வலிக்கு குதிகாலை தூக்கிக் கொண்டு நடப்பது போன்ற பயிற்சியும், முதுகு வலி போக்கிட பூனை போன்று முறுக்கிவிடுதல் பயிற்சியும் போலிஸாருக்கு கற்றுக் கொடுக்கப்பட்டது. சளி அதிகம் இருந்தால் கைகளைக் குவித்து வைத்து முதுகில் தாளமிடுவது போன்ற பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்த பயிற்சிகள் குறித்து இந்தியன் அசோசியேஷன் ஆப் பிசியோதெரபி உறுப்பினர் திவாகர் கூறுகையில், "கொரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் காவல்துறையின் பங்கு அதிகம். எனவே அவர்களுக்கு பிசியோதெரபி மூலம் இதயம், நுரையீரல் உள்ளிட்ட உடல் பாகங்களை பலமாக வைத்துக் கொள்வதற்கும் , நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தவும், பிசியோதெரபி மூச்சுப் பயிற்சி உதவியாக இருக்கும்" என தெரிவித்துள்ளார்.

பேரிடர் காலத்தில் காவல்துறையினரின் களைப்பைப் போக்கவும் கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்கும் வகையிலும் காவல்துறைக்கான இந்தப் புத்தாக்க பயிற்சி அவர்களுக்கு பணியின் சோர்வைப் போக்கி, கொரோனா தடுப்பு ஊரடங்கு பணிகளில் உத்வேகத்தை உற்சாகத்தை அளித்துள்ளது என்றால் மிகையல்ல.

banner

Related Stories

Related Stories