தமிழ்நாடு

“தமிழகம் முழுவதும் ஒரேநாளில் 4900 டன் காய்கறிகள் விற்பனை” அமைச்சர் MRK.பன்னீர்செல்வம் தகவல்!

சென்னையில் மட்டும் நேற்று 1400 மெட்ரிக் டன் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

“தமிழகம் முழுவதும் ஒரேநாளில் 4900 டன் காய்கறிகள் விற்பனை” அமைச்சர் MRK.பன்னீர்செல்வம் தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பொதுமக்களுக்கு தேவையான காய்கறி மற்றும் பழங்கள் விநியோகத்தை மேலும் விரிவுப்படுத்த முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக, வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தமிழகத்தில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், அத்தியாவசிய தேவையான காய்கறிகள், பழங்கள் வேளாண் மற்றும் தோட்டக்கலை துறை மூலம் வாகனங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தோட்டக்கலை, வேளாண்துறை, சென்னை மாநகர அதிகாரிகளுடன் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வது தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.ச்இந்த திட்டத்தை மேலும் விரிவுபடுத்த வேண்டும் என கூறினார்.

நேற்று மட்டும் சென்னையில் 1670 வாகனங்களில் 1400 மெட்ரிக் டன் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதேபோல, மாநிலம் முழுவதும் 4626 வாகனங்களில் 4,900 மெட்ரிக் டன் காய்கறிகள் விற்கப்பட்டுள்ளது.

மேலும், இன்றைய தினம் 13,096 வாகனங்களில் 6,500 மெட்ரிக் டன் காய்கறிகள், பழங்கள் விற்பனைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்களில் காவல்துறை மற்றும் தன்னார்வலர்கள் மூலம் காய்கறிகள் விற்பனை செய்யப்படும்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories