தமிழ்நாடு

“இ-பதிவு தொடர்பான சந்தேகங்களுக்கு..” : தீர்வளிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்ணை அறிமுகம் செய்தது தமிழக அரசு!

இ-பதிவு குறித்த சந்தேகங்களைப் பொதுமக்கள் தெளிவுபடுத்திக்கொள்ளும் வகையில், கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது.

“இ-பதிவு தொடர்பான சந்தேகங்களுக்கு..” : தீர்வளிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்ணை அறிமுகம் செய்தது தமிழக அரசு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை பரவல் அதிகரித்துவருவதைத் தடுக்கும் வகையில், தமிழக அரசு இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கை அறிவித்து, நடைமுறையில் உள்ளது.

மேலும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வோர் கட்டாயம் இ-பதிவு செய்ய வேண்டும் எனவும் அரசு அறிவித்தது. இ-பதிவு குறித்த சந்தேகங்களுக்கு பொதுமக்கள் விளக்கம் பெறும் வகையில் கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது.

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பொது முடக்கக் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மக்கள் தேவையின்றி வெளியே சுற்றுவதைத் தடுக்க இ-பதிவு முறை கொண்டுவரப்பட்டது. அவசியத் தேவைகளுக்காக மட்டுமே பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்படும் நிலையில், அதில் பல்வேறு குழப்பங்கள் நிலவுவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், அவர்களின் சந்தேகங்களைத் தெளிவுபடுத்த 1100 கட்டணமில்லா தொலைபேசி எண் (1100 ) தொடர்புகொள்ளலாம். காலை 10 முதல் மாலை 6 மணி வரை இந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டு தங்களின் சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம்." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories