தமிழ்நாடு

“100 நாட்களில் செய்வோம் என்று கூறி, பத்தே நாட்களில் செய்து முடிந்தார்” : பயனாளிகள் நெகிழ்ச்சி பேட்டி!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறை என்ற புதிய துறையை உருவாக்கி, 549 பயனாளிகளை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு நல உதவிகளை நேற்று மாலை தலைமைச் செயலகத்தில் வழங்கி வாழ்த்தினார்.

“100 நாட்களில் செய்வோம் என்று கூறி, பத்தே நாட்களில் செய்து முடிந்தார்” : பயனாளிகள் நெகிழ்ச்சி பேட்டி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்திற்கு முன்னதாக தொகுதிகள் தோறும் “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’’ என்ற தலைப்பில் பயணம் மேற்கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். அப்போது, நடைபெறும் தேர்தலில் தி.மு.கழகம்தான் ஆட்சிக்கு வரும், அவ்வாறு ஆட்சிக்கு வந்தவுடன், தனியாக துறை ஒன்றை ஏற்படுத்தி 100 நாட்களில் பொதுமக்களின் மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதி அளித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து கடந்த 7 ஆம் தேதி பதவியேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறை என்ற புதிய துறையை உருவாக்கி அதற்கு தனிசிறப்பு அலுவலர் நியமித்து துரித நடவடிக்கை மேற்கொண்டதன் விளைவாக பத்தே நாட்களில் 549 பயனாளிகளை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு நல உதவிகளை நேற்று மாலை தலைமைச் செயலகத்தில் வழங்கி வாழ்த்தினார். பலன் அடைந்த பயனாளிகள் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தங்கள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

இது பற்றிய விவரம் வருமாறு:

‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் 4 லட்சத்திற்கும் அதிகமான மனுக்கள் பெறப்பட்டன. தேர்தல் பிரச்சாரத்தின் போது, “இந்த மனுக்களுக்கென்று தனியே துறை அமைக்கப்பட்டு மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு 100 நாட்களுக்குள் உங்கள் குறைகள் தீர்க்கப்படும்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுருந்தார்.

“100 நாட்களில் செய்வோம் என்று கூறி, பத்தே நாட்களில் செய்து முடிந்தார்” : பயனாளிகள் நெகிழ்ச்சி பேட்டி!

அதன்படி, தமிழக மக்கள் தி.மு.கழகக் கூட்டணிக்கு அபரிமிதமாக வாக்களித்து வெற்றி பெறச்செய்து, தி.மு.கழகத்திற்கு அறுதிப்பெரும்பான்மையுடன் தனித்து ஆட்சி அமைக்கும் வகையில் வாக்களித்தனர். மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் கடந்த 7 ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.கழக ஆட்சி அமைந்தது. முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்ற அன்றே ஐந்து முத்தான திட்டங்களுக்கு கையெழுத்திட்டார்.

அதுமட்டுமின்றி “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” நிகழ்ச்சியில் பெறப்பட்டனுக்களுக்கு தீர்வு காணும் வகையில், “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” - என்ற புதிய துறையை முதல்வர் மு.க.ஸ்டாலின் உருவாக்கி, அந்தத் துறைக்கு சிறப்பு அதிகாரியாக ஷில்பா பிரபாகர் சதீஷ் அவர்களை நியமித்தார். சிறப்பு அதிகாரியும் உடனடியாக “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” நிகழ்ச்சியில் பெறப்பட்ட மனுக்களை உடனடியாக ஆய்வு செய்து அதில் மக்களின் கோரிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று, படிப்படியாக நிறைவேற்றி வருகிறார்.

அதன் ஒரு பகுதியாகத்தான் நேற்று “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” நிகழ்ச்சியில் அளிக்கப்பட்ட மனுக்களைச் பரிசீலித்து முதற்கட்டமாக 549 பேர்களுக்கு அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றியது மட்டுமின்றி அவர்களில் 10 நபர்களை நேரில் வரவழைத்து அவர்களுக்கு வேண்டிய உதவிகள், கோரிக்கைகளை நிறைவேற்றி அதற்கான சான்றிதழ் - உப கரணங்களை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள். “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” நிகழ்ச்சியில் மனு அளித்த பயனாளிகள் நெஞ்சம் நெகிழ்ந்து தங்களது மகிழ்ச்சியை, நன்றியை முதல்வர் அவர்களுக்குத் தெரிவித்துக் கொண்டனர்.

“100 நாட்களில் செய்வோம் என்று கூறி, பத்தே நாட்களில் செய்து முடிந்தார்” : பயனாளிகள் நெகிழ்ச்சி பேட்டி!

தாம்பரத்தில் நடை பெற்ற நிகழ்ச்சியில் மனு அளித்து பயனடைந்த பெண் ஒருவர் கூறுகையில், தாம்பரத்தில் நடைபெற்ற மீட்டிங்கில் நான் வந்து மனுபோட்டேன். அவர் “நூறுநாளில் உங்களுக்குச் செய்வோம் என்று கூறினார். அதே மாதிரி எங்களுக்கு திருப்தியாக செய்துவிட்டார். எனக்கு உறவினர்கள் யாரும் உதவி செய்ய வில்லை. இவர்தான் எனக்கு உதவி செய்து இருக்கிறார். உங்களுக்கு நன்றி அய்யா” என்று நெஞ்சம் நெகிழ்ந்து கூறினார்.

மாற்றுத்திறனாளிக்கு ஓய்வூதியம்!

அதேமாதிரி மாற்றுத் திறனாளியான பெண்ணின் சகோதரி கூறுகையில், “என் அக்கா ஒரு மாற்றுத் திறனாளி, அவருக்கு பென்ஷன் வழங்க வேண்டும் என்று எழுதிபோட்டேன். ‘நூறு நாளில் செய்வோம் கண்டிப்பாக பாருங்கள்’ என்று அப்போது கூறினார். இன்னும் மனு போட்டு முப்பது நாள் கூட ஆகவில்லை; அதற்குள் முதல் நாளிலேயே எங்களுக்கு உதவி செய்து கொடுத்துவிட்டார். முதல்வர் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வாரிசு சான்றிதழ்!

மனைவி இறந்து விட்டார் என வாரிசுச்சான்றிதழ் கேட்டவர் கூறியதாவது : - “என் மனைவி இறந்துட்டாங்க. வாரிசு சான்றிதழ் கேட்டு தாசில்தார் ஆபிஸில் மனு கொடுத்தேன். அது கிடைக்காமல் இருந்தது. அதனால் “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” நிகழ்ச்சியில் நான் மனு கொடுத்து இருந்தேன். அதனை விசாரித்து உடனே வாரிசுதாரர் சான்றிதழை வழங்கிட என்னை நேரில் வரவழைத்துக் கொடுத்தார். முதல்வருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

“100 நாட்களில் செய்வோம் என்று கூறி, பத்தே நாட்களில் செய்து முடிந்தார்” : பயனாளிகள் நெகிழ்ச்சி பேட்டி!

வீடு கேட்டேன்! கிடைத்தது!

வீடு கேட்டு மனு அளித்து இருந்த முத்துராமன் கூறுகையில், ‘நான் வீடுகேட்டு மனு கொடுத்திருந்தேன். அந்த மனுவை பெட்டியில் போட்டு இருந்தேன். அந்த உதவியினை உடனே செய்ய கொடுத்து விட்டார். முதல்வர் அவர்களுக்கு நன்றி!”

சொட்டு நீர்ப்பாசனம்!

இராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் சிறுவாளையத்தைச் சேர்ந்த சுபாஷ் என்பவர் கூறுகையில், “இராணிப் பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் ஒன்றியம், சிறுவாளையம் கிராமத்தைச் சேர்ந்தவன் நான். வேளாண்துறை சார்பாக நூறு சதவிகித மானியத்தில் வழங்கப்படுகின்ற மழை தூவாண் (சொட்டு நீர்ப்பாசனம்) கருவிகள் வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கைவைத்து மனு அளித்து இருந்தேன். அந்தக் கோரிக்கையை தற்போது முதலமைச்சர் அவர்கள் நிறைவேற்றுத்தந்திருக்கின்றார். அதற்காக முதலமைச்சர் அவர்களுக்கு எங்களது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்றார்.

தடுப்பணை:

திருவள்ளூர் மாவட்டம், ஆமூர்ஊராட்சி சித்தேரி கல்வாயில் தடுப்பணை கேட்டு மனு கொடுத்து அதற்கான உத்தரவினைப் பெற்ற முருகன் கூறுகையில், “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற நிகழ்ச்சியில் தடுப்பணை கட்டச் சொல்லி மனு கொடுத்தோம். இப்போ முதல்வர் அய்யா அவர்கள் உரிய நடவடிக்கை எடுத்து தடுப்பணை அமைப்பதற்கான சான்றிதழை வழங்கி இருக்கிறார். அவருக்கும், தமிழக அரசுக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

காது கேட்கும் கருவி :

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியைச் சேர்ந்த நந்தினி, காது கேட்கும் கருவி வைத்துக்கொண்டு பேசுகையில், “எனக்கு காது கேட்காது. அதற்கான கருவி கேட்டு மனு கொடுத்தேன். அதனை வழங்கிய முதல்வருக்கு நன்றி” என்று கூறினார்.

இதுபோன்று “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” நிகழ்ச்சியில் மனு அளித்தவர்கள் மகிழ்ச்சியில் திளைக்கின்றனர். அவர்களின் கோரிக்கைகள் ஆட்சி அமைந்த 10 நாளில், மனு அளித்த ஒரு மாதத்திற்குள் நிறைவேற்றப்பட்டு இருப்பது கலைஞர் வழிநின்று “சொன்னதைச் செய்வோம், செய்வதைத்தான் சொல்வோம்!” என்பது இதன் மூலம் மெய்ப்பிக்கப்பட்டது.

இந்நிகழ்வின்போது தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” துறையின் சிறப்பு அலுவலர் திருமதி ஷில்பா பிரபாகர் சதீஷ் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

banner

Related Stories

Related Stories