தமிழ்நாடு

ஈரோட்டில் ₹7.5 கோடி மதிப்பில் 400 O2 படுக்கைகள்: புதிய கட்டுமான பணியை தொடக்கி வைத்த அமைச்சர் முத்துசாமி!

7.5 கோடி ரூபாய் மதிப்பில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 400 படுக்கைகள் கொண்ட கூடுதல் கட்டட கட்டுமான பணிகளை வீட்டுவசதி துறை அமைச்சர் சு.முத்துசாமி தொடங்கி வைத்தார்.

ஈரோட்டில் ₹7.5 கோடி மதிப்பில்  400 O2 படுக்கைகள்: புதிய கட்டுமான பணியை தொடக்கி வைத்த அமைச்சர் முத்துசாமி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முற்றிலுமாக கொரானா நோய் சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளது. இங்கு கூடுதலாக 1000 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றது. 400 படுக்கைகள் கொண்ட கூடுதல் கட்டட கட்டுமான பணிகளை தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சா் சு. முத்துசாமி தொடங்கி வைத்தார்

பின்னர் அமைச்சர் இது குறித்து பேசும் போது பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரியானது கொரொனா தொற்று ஏற்பட்டவா்களுக்காக முழுமையாக இயங்குகிறது. அன்டை மாவட்டங்களில் இருந்தும் சிகிச்சைக்காக இங்கு வருவதால் படுக்கை வசதிகளை அதிகப்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து படுக்கைகள் அதிகப்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றது.

ஈரோட்டில் ₹7.5 கோடி மதிப்பில்  400 O2 படுக்கைகள்: புதிய கட்டுமான பணியை தொடக்கி வைத்த அமைச்சர் முத்துசாமி!

இங்கு துவங்கப்பட்டுள்ள பணிகள் ரோட்டரி சங்கங்கள் மற்றும் பல சேவை சங்கங்கள், தொழில் நிறுவனங்கள், வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரின் பங்களிப்புடன், 400 படுக்கைகள் கொண்ட முற்றிலும் ஆக்சிஜன் வசதி கொண்ட சிறப்பு மருத்துவ வளாகம் அமைக்கப்படவுள்ளது.

கொரோனோ தீவிர தாக்கம் உள்ள இக்கால கட்டத்தில், ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளே அதிகம் தேவைப்படுகிறது. இக்கட்டடமானது நவீன தொழில்நுட்பத்தில் ஒரு மாத காலத்திற்குள் கட்டி முடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என கூறினார்.

banner

Related Stories

Related Stories