தமிழ்நாடு

கொரோனாவைக் எதிர்கொள்ள தமிழக அரசு ஒரு நொடி கூட ஓய்வின்றி செயல்பட்டு வருகிறது: அமைச்சர் கீதா ஜீவன் பேட்டி!

கொரோனா தொற்றுநோய் கட்டுப்படுத்த தமிழக அரசு எல்லா வழிகளிலும் ஒரு நொடி கூட ஓய்வின்றி செயல்பட்டு வருகிறது என சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.

கொரோனாவைக் எதிர்கொள்ள தமிழக அரசு ஒரு நொடி கூட ஓய்வின்றி செயல்பட்டு வருகிறது: அமைச்சர் கீதா ஜீவன் பேட்டி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தூத்துக்குடி மாவட்டம் கீழவைப்பார் மற்றும் கயத்தாறு பகுதிகளில், மின்னல் தாக்கி உயிரிழந்த கோட்டைபாண்டி, ரமேஷ், முருகராஜ் மற்றும் மாரிமுத்து ஆகியோரின் குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் தெரிவித்த தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன், மாநில பேரிடர் மேலாண்மை நிவாரண நிதியான தலா நான்கு லட்ச ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் ., “ஸ்டெர்லைட் ஆக்சிசன் உற்பத்தியில் ஏற்பட்ட பழுது சரி செய்யப்பட்டுவிட்டது. புதன்கிழமை முதல் ஆக்சிசன் உற்பத்தி செய்து வழங்கப்படும். உயிர்காக்கும் மருந்துகளை கள்ளச்சந்தையில் விற்பனை செய்பவர்கள் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

ஆகவே கள்ளச்சந்தையில் ஆக்சிஜன் மற்றும் மருந்துகளை பதுக்குபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அரசு மருத்துவமனைகள் மற்றும் கொரோனோக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளில் உயிர் காக்கும் மருந்துகள் எளிதில் கிடைப்பதற்கு அரசாங்கம் வழிவகை செய்யும். கொரோனா தொற்றுநோய் கட்டுப்படுத்த தமிழக அரசு எல்லா வழிகளிலும் ஒரு நொடி கூட ஓய்வின்றி தயாராகி செயல்பட்டு வருகிறது” என தெரிவித்தனர்.

banner

Related Stories

Related Stories