தமிழ்நாடு

கோவிட் நோயாளிகளுக்கு இலவச சேவை செய்த ஆட்டோ ஓட்டுநர்கள்: வாழ்த்து கடிதம் எழுதிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!

மதுரையில் கொரோனா நோயாளிகளை ஆட்டோவில் இலவசமாக அழைத்து செல்லும் இளைஞர்களின் செயலை பாராட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நேரில் வழங்கப்பட்டது.

கோவிட் நோயாளிகளுக்கு இலவச சேவை செய்த ஆட்டோ ஓட்டுநர்கள்: வாழ்த்து கடிதம் எழுதிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கொரோனா பெரும் தொற்றின் இரண்டாவது அலை ஆழிப்பேரலை போல் அகிலத்தையே வாரி சுருட்டிக் கொண்டு இருக்கிறது. தமிழ் நாட்டில் நாளுக்கு நாள் கொரோனாவின் வேகம் அதிகரித்து வருகிறது. அதிலும் மதுரை மாவட்டத்தில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொற்று பாதிக்கப்பட்டு அரசு ராஜாஜி மருத்துவமனை, தோப்பூர் அரசு மருத்துவமனை, காமராஜர் பல்கலைக்கழகம் மற்றும் தனியார் மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொற்று பாதிக்கப்பட்டு வருகிறவர்களை கண்டாலே பயந்து ஓடும் இக்கால கட்டத்தில் மதுரை மேல அனுப்பானடி பகுதியில் ஆட்டோ தொழிலாளர் இருவர் கொரோனா நோயாளிகளை தனது ஆட்டோவில் இலவசமாக அழைத்துச் சென்று மருத்துவமனையில் சிகிச்சைக்காக இறக்கிவிட்டு வருவது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

கோவிட் நோயாளிகளுக்கு இலவச சேவை செய்த ஆட்டோ ஓட்டுநர்கள்: வாழ்த்து கடிதம் எழுதிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!

மதுரை மேல அனுப்பானடி தீயணைப்பு நிலைய ஆட்டோ ஸ்டாண்டில் பத்துக்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் உள்ளது இதில் குருராஜ் என்ற இளைஞர் தனது நண்பர் அன்புநாதன் ஆகிய இரண்டு இளைஞர்களும் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் இந்தப் பேரிடரில் காலத்தில் ஆட்டோ இயங்குவதற்காக தனி அனுமதி பெற்று அந்த அனுமதி கடிதத்தினை ஆட்டோவின் முன்பகுதியில் ஒட்டி ஆட்டோ முழுவதும் வேப்ப இலையை கட்டிக்கொண்டு நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றனர். அதோடு முக கவசம் அணியாமல் வருபவருக்கு தானே முககவசம் வாங்கி அணிவித்து கூட்டி செல்கின்றனர்.

சத்தமில்லாமல் இவர்கள் செய்து வரும் இச்சேவை அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இவர்களது மனிதநேயத்தை பாராட்டி கடிதம் எழுதியுள்ளார். அதில் ஆட்டோ ஒட்டும் இளைஞர்களின் செயல் பாராட்டுக்குரியது என்றும், பேரிடர் காலம் எனும் போர் கால அடிப்படையில் மேற்கொண்டுள்ள தமிழக அரசின் நடவடிக்கைக்கு துணை நிற்க்கும் தங்களது பணி பாராட்டுக்குறியது என்றும் தங்களது குடும்பத்தினையும் நோய் தொற்று கால நடை முறைகளை பின்பற்றி நலமுடன் வாழ வாழ்த்துவதாகவும் தமிழக முதல்வர் கடிதம் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கோவிட் நோயாளிகளுக்கு இலவச சேவை செய்த ஆட்டோ ஓட்டுநர்கள்: வாழ்த்து கடிதம் எழுதிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!

தமிழக முதல்வர் அவர்களின் வாழ்த்து கடிதம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேல அனுப்பானடி ஆட்டோ நிலையத்தில் ஆட்டோ ஓட்டுநர் குருராஜ் அவரது நண்பர் அன்பு நாதன் இருவருக்கும் மதுரை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நவீன் பாண்டியன் அவர்களால் நேரில் வழங்கப்பட்டது . கடிதத்தைப் பெற்றுக்கொண்ட குருராஜ் நண்பர்கள் முதலமைச்சர் வாழ்த்துகளுக்கு நன்றி தெரிவித்ததுடன் தங்களைப் போன்றோருக்கு மேலும் ஊக்கமளிப்பதாகவும் தெரிவித்தனர்.

banner

Related Stories

Related Stories