தமிழ்நாடு

மே 11ம் தேதி கூடுகிறது தமிழக சட்டப்பேரவை... நாளை நடைபெறுகிறது முதல் அமைச்சரவை கூட்டம்!

தமிழக சட்டப்பேரவை கூட்டம் வரும் 11ம் தேதி நடைபெறும் என பேரவைச் செயலாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

மே 11ம் தேதி கூடுகிறது தமிழக சட்டப்பேரவை... நாளை நடைபெறுகிறது முதல் அமைச்சரவை கூட்டம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணி 159 இடங்களில் அமோக வெற்றி பெற்றது. தி.மு.க தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியது.

இதையடுத்து நேற்று தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றுக்கொண்டார். அவருடன் 33 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். இந்த அமைச்சரவையில் 15 புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 16வது சட்டமன்றப் பேரவையின் முதல் கூட்டத்தொடர் மே 11ம் தேதி கூடுகிறது என சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சட்டமன்ற பொதுத்தேர்தலில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்பு நிகழ்வுக்காக, வரும் 11ம் தேதி சட்டமன்ற கூட்டம் சென்னை ஓமந்தூரார் தோட்டம், கலைவாணர் அரங்கில் நடைப்பெறும் எனவும், அன்றைய தினமே உறுப்பினர்கள் உறுதிமொழி அல்லது பற்றுறுதி பிரமாணம் எடுத்துக்கொள்ளும் நிகழ்ச்சி நடைப்பெறும்.

மே 11ம் தேதி கூடுகிறது தமிழக சட்டப்பேரவை... நாளை நடைபெறுகிறது முதல் அமைச்சரவை கூட்டம்!

அதுமட்டுமின்றி, சட்டமன்ற பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான தேர்தல் சான்றிதழை உறுதிமொழி அல்லது பற்றுறுதி பிரமாணம் எடுத்துக்கொள்ள வரும்போது உறுப்பினர்கள் தவறாமல் கொண்டு வர வேண்டும்.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பேரவை தலைவர் மற்றும் பேரவைத் துணைத் தலைவருக்கான தேர்தல் வரும் மே 12ம் தேதி காலை 10மணிக்கு நடைபெறும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்நாட்டில் மே 10ம் தேதி முதல் இரண்டு வாரத்திற்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் முதல் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories