தமிழ்நாடு

"திராவிட இனத்தைச் சார்ந்தவன்": இணையத்தை கலக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலினின் ட்விட்டர் பக்க சுயவிவரம்!

முதல்வர் மு.க.ஸ்டாலினின் ட்விட்டர் மற்றும் பேஸ்புக் முகப்பு பக்கம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

"திராவிட இனத்தைச் சார்ந்தவன்": இணையத்தை கலக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலினின் ட்விட்டர் பக்க சுயவிவரம்!
Vignesh
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாட்டில் நடந்தது முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதில் தி.மு.க 125 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்பு விழா நடைபெற்றது. இதில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் இன்று தமிழக முதல்வராக ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்’ எனத் துவங்கி உறுதிமொழி ஏற்று தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றார்.

மு.க.ஸ்டாலின் முதலமைச்சராகப் பதவியேற்ற சில நிமிடங்களிலேயே அவரது ட்விட்டர் முகப்புப் பக்கத்தில் தமிழ்நாட்டின் முதல்வர் என்றும், திராவிட இனத்தைச் சார்ந்தவன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

"திராவிட இனத்தைச் சார்ந்தவன்": இணையத்தை கலக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலினின் ட்விட்டர் பக்க சுயவிவரம்!
Vignesh

இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ட்விட்டர் பக்கம் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் #ChiefMinisterMKStalin, #முகஸ்டாலின்எனும்நான் போன்ற ஹேஷ்டேக்குகள் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.

banner

Related Stories

Related Stories