தமிழ்நாடு

மே 1, 2ல் விற்பனைக்கு தடை: சென்னை காசிமேட்டில் குவிந்த மக்கள் - அபராதம் விதித்து கொள்ளையடிக்கும் அரசு!

சனி ஞாயிறு இரண்டு நாட்களில் மீன் விற்பனை இல்லாததால் காசிமேட்டில் குவிந்த கூட்டம். முக கவசம் அணியாதவர்களுக்கு 200 ரூபாய் அபராதம்.

மே 1, 2ல் விற்பனைக்கு தடை: சென்னை காசிமேட்டில்  குவிந்த மக்கள் - அபராதம் விதித்து கொள்ளையடிக்கும் அரசு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்தில் மே 1ஆம் தேதி இரண்டாம் தேதி இரண்டு நாட்களும் மீன் மற்றும் இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் ஞாயிற்றுக்கிழமை அசைவம் சமைக்கும் மக்கள் இன்று சென்னை காசி மேட்டில் மீன்களை வாங்க குவிந்தனர்.

தமிழகத்தில் வேகமாக பரவி வரும் இரண்டாம் அலை வைரஸ் தொற்றால் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து வருகிறது. ஏற்கெனவே இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஏப்ரல் 30ஆம் தேதி இன்று வரை ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

இதனையடுத்து மீன் சந்தை மற்றும் இறைச்சி கடைகளில் ஏராளமான கூட்டம் குவிந்ததால் அதனை கட்டுப்படுத்தும் விதமாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சி மீன் விற்பனைக்கு தமிழக அரசு தடை விடுத்துள்ளது.

மே 1, 2ல் விற்பனைக்கு தடை: சென்னை காசிமேட்டில்  குவிந்த மக்கள் - அபராதம் விதித்து கொள்ளையடிக்கும் அரசு!

இதனையடுத்து விடுமுறை தினமான மே 1ஆம் தேதி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரண்டாம் தேதி ஆகிய இரு தினங்களும் காசிமேட்டில் மீன் விற்பனைக்கு அனுமதி மறுத்து மீன்வளத்துறை உத்தரவிட்டது. இதனால் இரண்டு நாட்கள் மீன் விற்பனை இல்லாததால் ஞாயிற்றுக்கிழமை அசைவம் சமைக்க மீன் பிரியர்கள் இன்றே காசிமேட்டில் மீன்களை வாங்க குவிந்தனர்.

இதனால் அதிகாலை முதலே ஏராளமான கூட்டம் குவிந்து காசிமேட்டில் திருவிழா போன்று காட்சி அளித்தது. இதனால் மீன்வளத்துறை மற்றும் காவல்துறையினர் காசிமேட்டில் சோதனையில் ஈடுபட்டனர். தனி மனித இடைவெளியை கடை பிடிக்காமல் விற்பனை செய்யும் விற்பனையாளர்களுக்கு மீன்வளத் துறை அதிகாரிகள் எச்சரித்தனர்.

மேலும் முக கவசம் அணியாமல் மீன் விற்பனை செய்பவர்களுக்கும் மீன் வாங்க வரும் பொதுமக்களுக்கும் காசிமேடு மீன்பிடித் துறைமுக போலீசார் 200 ரூபாய் அபராதம் விதித்தனர்.

banner

Related Stories

Related Stories