தமிழ்நாடு

“அரசு நிலத்தை மோசடியாக விற்ற அ.தி.மு.க அமைச்சர்” - ரூ. 1,575 கோடி ஊழல் செய்ததாக புகார்!

தமிழக தலைமை செயலரிடம் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மீது நிலமோசடி புகார்.

“அரசு நிலத்தை மோசடியாக விற்ற அ.தி.மு.க அமைச்சர்” - ரூ. 1,575 கோடி ஊழல் செய்ததாக புகார்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

சென்னை தலைமை செயலகத்தில் மருதுசேனை சங்கத்தின் தலைவர் கரு.ஆதி நாராயணன் உள்ளிட்டோர் தமிழக தலைமை செயலரிடம் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மீது நிலமோசடி புகார் அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஆதி நாராயணன், “வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் கோயம்பேடு அருகே அரசுக்கு சொந்தமான ரூபாய் 1,575 கோடி மதிப்பிலான 10.5 ஏக்கர் நிலத்தை தனியாருக்கு எந்தவித சட்டதிட்டங்களையும் பின்பற்றாமல் விற்றுள்ளார்.

அரசு நிலத்தை அரசுப்பள்ளி கட்ட அல்லது பொதுமக்கள் பயன்பாட்டிற்காக நிலத்தை பயன்படுத்தலாமே தவிர, யாருக்கும் விற்கக்கூடாது என விதி உள்ள நிலையில், அமைச்சர் குறுகிய கால அளவில் ஒப்புதல் கொடுத்துள்ளார். இந்த ஒப்பந்தத்தில் 1,575 கோடி அளவில் ஊழல் நடந்துள்ளது.

கொரோனா காலத்தில் அணியக்கூடிய முகக் கவசத்தில் ஊழல், சுகாதாரத்துறை, மின்சாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் ஊழல் நடைபெற்றுள்ளது.

அரசு நிலத்தை மோசடி செய்த ஆர்.பி.உதயகுமார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மருதுசேனை சங்கம் சார்பில் தலைமை செயலாளர் உதவியாளரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories