தமிழ்நாடு

இதேநிலை நீடித்தால் கொரோனா பாதிப்பு 10 லட்சத்தை தாண்டும்... அரசுக்கு எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்!

தமிழகத்தில் 10 லட்சம் கொரோனா பாதிப்புகள் ஏற்பட 1 ஆண்டு ஆன நிலையில், தற்போதைய சூழலில் இரண்டே மாதத்தில் 10 லட்சம் பேர் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இதேநிலை நீடித்தால் கொரோனா பாதிப்பு 10 லட்சத்தை தாண்டும்... அரசுக்கு எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாகப் பரவி வரும் நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அசுர வேகத்தில் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த மார்ச் 11 முதல் 17ம் தேதி வரையிலான ஒரு வாரத்தில் 780 கொரோனா பாதிப்பு என இருந்த நிலையில் தற்போது 10 ஆயிரத்தை தாண்டியது.

இந்த நிலையில் கொரோனா தடுப்புப் பணிகளை காபந்து அ.தி.மு.க அரசு முழுமையாக மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக தமிழகத்தில் பல இடங்களில் கொரோனா தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனால் முதல் டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்ட பலரும் இரண்டாவது டோஸ் எடுத்துக்கொள்ள முடியாமல் அவதியுற்று வருகின்றனர். அதுமட்டுமல்லாது நோயாளிகளுக்கு ஏற்ற மருத்துவக் கட்டமைப்பு ஏற்பாடுகளைச் செய்யாததன் விளைவாக, “கொரோனா பாதிப்பு ஏற்பட்டும், அறிகுறிகள் இல்லையென்றால் அரசு மருத்துவமனைக்கு நோயாளிகள் வரவேண்டாம்” என சென்னை மாநகராட்சி கூறியுள்ளது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், கொரோனா பாதிப்பு நீடித்து வந்தால், அடுத்த இரண்டு மாதத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மேலும் 10 லட்சத்தைத் தாண்டும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் கொரோனா தடுப்பு நவடிக்கையை தீவிரப்படுத்த அரசுக்கு மருத்துவ நிபுணர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories