தமிழ்நாடு

“சூரப்பா எங்கு சென்றாலும் விடமாட்டோம்; சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” - நீதிபதி கலையரசன் எச்சரிக்கை!

280 கோடி ரூபாய் ஊழல் தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் தரப்பில் இருந்து எந்த ஆவணங்களும் கொடுக்கப்படுவதில்லை என குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

“சூரப்பா எங்கு சென்றாலும் விடமாட்டோம்; சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” - நீதிபதி கலையரசன் எச்சரிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சூரப்பாவின் பதவிக்காலம் முடிந்து எங்கு சென்றாலும் 280கோடி ரூபாய் ஊழல் தொடர்பாக அவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும், பதில் அளிக்கவில்லை என்றால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிபதி கலையரசன் தெரிவித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா மீதான விசாரணை குறித்து பேசியுள்ள நீதிபதி கலையரசன், சூரப்பா மீதான குற்றச்சாட்டுகளின் விசாரணை 80% நிறைவடைந்துள்ளது. இறுதிக்கட்ட விசாரணை நடைபெறுகிறது.

இன்னும் 3 முதல் 4 சாட்சியங்களை மட்டுமே விசாரிக்க வேண்டியுள்ளது. அதன் தொடர்ச்சியாக அனைத்து குற்றச் சாட்டுகளையும் தொகுத்து, சூரப்பாவிடம் பதில் கேட்கப்படும்.

எழுத்துப்பூர்வமாகவோ, நேரிலோ பதிலளிக்கலாம். எழுத்துபூர்வமான விளக்கத்தின் மீது ஆணையத்திற்கு திருப்தி ஏற்படாவிட்டால் நேரில் அழைத்து விசாரணை நடத்தப்படும்.

தற்போது வரை ஆணையம் கேட்கும் ஆவணங்களை பல்கலைக்கழகம் தரப்பில் முழுமையாக சமர்ப்பிக்கப்படுவதில்லை. ஆவணங்கள் முழுமையாக ஒப்படைக்கப்படவில்லை என ஏற்கனவே விசாரணை அதிகாரிக்கு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

சூரப்பாவின் பதவி முடிந்து எங்கு சென்றாலும் அவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும், பதில் அளிக்கவில்லை என்றால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

banner

Related Stories

Related Stories