தமிழ்நாடு

9 IAS அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு? அதிமுக அரசின் அலங்கோலத்தின் மற்றுமொரு சான்று!

அ.தி.மு.க. ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளன.

9 IAS அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு? அதிமுக அரசின் அலங்கோலத்தின் மற்றுமொரு சான்று!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்தில் அரசு ஊழியர்களை தேர்வு செய்ய, தமிழ்நாடு பணியாளர் தேர்வு ஆணையம் (டி.என்.பி.எஸ்.சி.) இருப்பதைப் போல, ஆசிரியர்களை தேர்வு செய்ய, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.) செயல்பட்டு வருகிறது.

கல்வித் துறையில் ஆசிரியர்களின் பணியிடங்கள் காலியாகும் போதெல்லாம், அந்த இடங்களை நிரப்புவதற்கு ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களின் மூப்பு அடிப்படையில் முறையாக தேர்வு நடத்தி - நேர்காணல் மூலம் ஆசிரியர்களை நியமனம் செய்வது ஆசிரியர் தேர்வு வாரியத்தின் பணியாகும்.

இந்தத் தேர்வு வாரியம் கடந்த 10 ஆண்டுகளாக அதுவும் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தது முதல் பல்வேறு முறைகேடுகளுக்கு இடம் அளித்து வருவதாக அவ்வப்போது புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தன. குறிப்பாக, தேர்வு வாரியம் மூலம் தயாரான கேள்வித் தாள்களில் குளறுபடிகள் இருந்துள்ளது பற்றி அவ்வப்போது கேட்கப்பட்ட போது, அ.தி.மு.க. ஆட்சியில் கல்வி அமைச்சர்களாக பதவி வகித்தவர்கள் அதை மறுத்துள்ளனர்.

9 IAS அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு? அதிமுக அரசின் அலங்கோலத்தின் மற்றுமொரு சான்று!

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கட்டுப்பாட்டில் அந்தத் தேர்வு வாரியம் இயங்கி வந்தாலும், ஆட்சியாளர்களின் சொல்படிதான் அது செயல்பட்டு வந்துள்ளது, தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் அந்த ஆசிரியர் தேர்வு வாரியத்தில் தலைவர்களாக 9 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியாற்றியுள்ளனர்.

அந்த கால கட்டங்களில் தயாரிக்கப்பட்ட கேள்வித் தாள்களில் வெளிப்படைத் தன்மை இல்லை என்றும், பல்வேறு குளறுபடிகள் நிகழ்ந்துள்ளன என்றும் பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் மாநில தகவல் ஆணையம் விசாரணை மேற்கொண்டது. இந்த விசாரணையில் மேற்காணும் புகார்கள் உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரிய ஆணையம் கடும் அதிருப்தி அடைந்து, ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் பொறுப்பு வகித்த 9 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை கட்டாய ஓய்வில் அனுப்ப தலைமைச் செயலாளருக்கு பரிந்துரை செய்துள்ளது. கட்டாய ஓய்வுக்குப் பரிந்துரை செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் பெயர்கள் வருமாறு:-

சுர்ஜித் கே.சௌத்ரி, விடிநாயர், காகர்ல உஷா, டாக்டர்.டி.ஜெகந்நாதன், கே.சீனிவாசன், என்.நந்தகுமார், திருமதி. எஸ்.ஜெயந்தி, என்.வெங்கடேஷ், திருமதி. ஜி.லதா.

தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005-ன்படி, இந்தக் கட்டாய ஓய்வுக்கான பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக மாநில தகவல் ஆணையத்தின் ஆணையர் பொறுப்பு வகிக்கும் முத்துராஜ் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories