தமிழ்நாடு

“வாக்கு எண்ணும் மையத்தில் தடையை மீறி உலாவிய மர்ம நபர்கள்”: தோல்வி பயத்தில் சதி செய்கிறதா அ.தி.மு.க அரசு ?

திருவள்ளூரில் வாக்குப் பெட்டி வைக்கப்பட்டுள்ள அறைக்கு அருகே கூட்டம்கூட்டமாக அறையில் இருந்து ஆசிரியர்கள் வருவதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

“வாக்கு எண்ணும் மையத்தில் தடையை மீறி உலாவிய மர்ம நபர்கள்”: தோல்வி பயத்தில் சதி செய்கிறதா அ.தி.மு.க அரசு ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திருவள்ளூர் மாவட்டத்தில் 10 தொகுதிகளில் பதிவான வாக்கு பெட்டிகளை திருவள்ளூர் அருகே உள்ள பெருமாள்பட்டு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் 3 அடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருவெற்றியூர் மதுரவாயல் அம்பத்தூர் உள்ளிட்ட வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறையின் அருகே இருந்து சிலர் வெளியே வந்துள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த கட்சியினர் அவர்களை வழி மறித்து விசாரணை நடத்தினர்.

அப்போது, அப்பள்ளியில் ஆன்லைன் வகுப்பு நடைபெறுவதாகக் கூறி, அதற்காக ஆசிரியர் ஆசிரியைகள் வந்ததாக மழுப்பலான பதிலைக் கூறியுள்ளனர். இதனையடுத்து காவல்துறை அவர்களை விசாரிக்காமல் விடுத்ததால் அரசியல் கட்சியினர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். மேலும் இதுதொடர்பான உரிய பதிலை அளிக்க வேண்டும் எனவும் தி.மு.க மற்றும் அனைத்து கட்சி கோரிக்கை வைத்துள்ளனர். இதனிடையே அம்பத்தூர் தி.மு.க வேட்பாளர் ஜோசப்சாமுவேலின் வழக்கறிஞர்கள் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துசாமியிடம் புகார் மனு அளித்தனர்.

banner

Related Stories

Related Stories