தமிழ்நாடு

“சிதைந்த கல்லூரிக் கனவு” - கல்விக் கடன் கிடைக்காததால் மதுரை மாணவி தற்கொலை!

மதுரையில் கல்விக்கடன் கிடைக்காததால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“சிதைந்த கல்லூரிக் கனவு” - கல்விக் கடன் கிடைக்காததால் மதுரை மாணவி தற்கொலை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மதுரை மாவட்டம், தேவிநகர் மேட்டுத்தெருவைச் சேர்ந்த கல்லூரி மாணவி தாரணி. இவர் தனது மேற்படிப்பிற்காக வங்கியில் கல்விக்கடன் கேட்டு விண்ணப்பித்திருந்தார். இதற்கான ஆவணக் கட்டணத் தொகை ஒரு லட்சத்து 27ஆயிரம் செலுத்தினார்.

இந்நிலையில் மாணவி தாரணிக்கு கல்விக்கடன் தர வங்கி நிர்வாகம் திடீரென மறுத்துள்ளது. கடன் கிடைக்காததால் கல்லூரி கனவு சிதைத்துவிட்டதே என மன வேதனையிலிருந்த தாரணி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

பிறகு இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலிஸார் தாரணியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட வங்கியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே கல்விக் கடன் கிடைக்காமல் கல்லூரி மாணவர்கள் தற்கொலை செய்யும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. கல்விக் கடன் வாங்கி படிக்கலாம் என அரசு அறிவிப்புகள் இருந்தாலும், பல வங்கிகளில் கல்விக்கடன் கொடுக்க்கப்படுவதில்லை. அப்படியே கொடுத்தாலும் அந்தக் கடனை, மாணவர்களின் படிப்பு முடிவதற்குள்ளேயே திருப்பிச் செலுத்த வேண்டும் என வங்கிகள் நிர்ப்பந்திப்பதால் பல மாணவர்கள் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

எனவே கல்விக் கடனால் ஏற்படும் தற்கொலைகளைத் தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என கல்வியாளர்களும், பெற்றோர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories