தமிழ்நாடு

“அது எப்படி எல்லா மாநிலத்திலும் கோளாறான இயந்திரங்களில் தாமரைக்கே பதிவாகிறது?” - கேள்வி எழுப்பும் ஜோதிமணி!

எல்லா மாநிலத்திலும் எப்படி கோளாறான வாக்கு இயந்திரத்தில் யாருக்கு வாக்களித்தாலும் தாமரைச் சின்னத்தில் பதிவாகிறது என மக்களவை உறுப்பினர் ஜோதிமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

“அது எப்படி எல்லா மாநிலத்திலும் கோளாறான இயந்திரங்களில் தாமரைக்கே பதிவாகிறது?” - கேள்வி எழுப்பும் ஜோதிமணி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் மாநிலம் முழுவதும் 72.78 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. பதிவான வாக்குகள் மே 2ம் தேதி எண்ணப்பட உள்ளது.

தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்ற தேர்தலில் அ.தி.மு.க வினர் மற்றும் பா.ஜ.கவினர் பல்வேறு குளறுபடிகளைச் செய்ய முயற்சித்தனர். தி.மு.க வேட்பாளர் கார்திகேய சிவசேனாபதி மீது தாக்குதல் நடத்தியது, வாக்காளர்களை அமைச்சர் பெஞ்சமின் ஆபாசமாகப் பேசி மிரட்டியது, கள்ள ஓட்டுப்போட முயன்றது என அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணியினர் தோல்வி பயத்தில் தேர்தல் விதிகளை மீறி அராஜகமாக நடந்துகொண்டனர்.

எல்லா மாநிலங்களிலும் வாக்கு இயந்திரத்தில் சித்துவேலை செய்துவரும் பா.ஜ.க, தமிழகத்திலும் இதை முயற்சித்து பார்த்துள்ளது. விருதுநகர் சத்ரிய பள்ளி வாக்குச்சாவடியில் எந்த சின்னத்தில் வாக்களித்தாலும் பா.ஜ.க.வின் தாமரை சின்னத்தில் வாக்குப் பதிவாகுவதாக நேற்று பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதேபோல் மற்ற சில வாக்குச்சாவடிகளிலும் நடந்துள்ளது. இதன் பின்னர் தேர்தல் அதிகாரிகள் வாக்குப்பதிவு இயந்திரத்தைச் சரி பார்த்து மீண்டும் வாக்குப்பதிவை நடத்தினர்.

இந்நிலையில் “எல்லா மாநிலங்களிலும் கோளாறான வாக்குப்பதிவு எந்திரங்களில் எந்த சின்னத்தில் வாக்களித்தாலும் ஏன் தாமரைக்கே பதிவாகிறது?” என்று காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "விருதுநகரில் ஒரு வாக்குச்சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இது இயற்கையானதாகக் கூட இருக்கலாம். ஆனால், அதெப்படி ஒவ்வொரு முறையும், எல்லா மாநிலங்களிலும் கோளாறான இயந்திரங்களில் எந்த சின்னத்தில் வாக்களித்தாலும் தாமரைக்கே பதிவாகிறது? ஏன் ஒருமுறை கூட மற்ற சின்னங்களில் பதிவாவதில்லை?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

மக்களவை உறுப்பினர் ஜோதிமணியின் கேள்வி நியாயமானதே. ஏனென்றால் கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது கூட பல்வேறு மாநிலங்களில் வாக்களித்தபோது எல்லா ஓட்டுகளும் தாமரை சின்னத்திற்கே விழுவதாகப் பொதுமக்களும், அரசியல் கட்சிகளும் குற்றம்சாட்டினர்.

இந்த குற்றச்சாட்டு தொடர்ச்சியாக எந்த மாநிலத்தில் தேர்தல் நடந்தாலும் எழுந்து வருகிறது. இதனால் தான் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பா.ஜ.க முறைகேடு செய்வதாக எல்லா அரசியல் கட்சிகளும் தெரிவித்துவருகின்றனர்.

banner

Related Stories

Related Stories