தமிழ்நாடு

“தொகுதிக்கு ஒண்ணும் செய்யாம வாக்கு கேட்க வந்துட்டீங்க”: பெண்கள் முற்றுகையால் ஓட்டம் எடுத்த கடம்பூர் ராஜூ!

கோவில்பட்டியில், சாலை மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளைச் செய்துதராமல் வாக்கு கேட்க மட்டும் வந்துட்டீங்களா எனக் கூறி அமைச்சர் கடம்பூர் ராஜூவை பெண்கள் முற்றுகையிட்டனர்.

“தொகுதிக்கு ஒண்ணும் செய்யாம வாக்கு கேட்க வந்துட்டீங்க”: பெண்கள் முற்றுகையால் ஓட்டம் எடுத்த கடம்பூர் ராஜூ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க அமைச்சர் கடம்பூர் ராஜூ, சாஸ்திரிநகர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார்.

அமைச்சர் கடம்பூர் ராஜூ பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது, அப்பகுதி பெண்கள் அவரை முற்றுகையிட்டு “தொகுதிப் பக்கமே வராமல், தற்போது ஓட்டு கேட்க மட்டும் ஏன் வரீங்க?” என சரமாரியாகக் கேள்வி எழுப்பினர்.

மேலும், கடந்த தேர்தலில் சாலை, குடிநீர் வசதிகள் செய்து கொடுக்கப்படும் என சொன்னீர்கள், ஆனால் எங்கள் பகுதிக்கு எந்தவொரு அடிப்படை வசதியும் செய்து கொடுக்கவில்லை. எதுவும் செய்து கொடுக்காமல் ஓட்டுக் கேட்க மட்டும் வந்துட்டீங்களா எனக் கேட்டு அவரை முற்றுகையிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பெண்கள் முற்றுகையிட்டதால், உடனே அப்பகுதியில் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு வேறு பகுதியில் பிரச்சாரம் செய்ய கடம்பூர் ராஜூ சென்றுவிட்டார்.

தமிழகம் முழுவதுமே அ.தி.மு.க மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் பிரச்சாரம் செய்யும் இடங்களில் எல்லாம் பொதுமக்கள் சரமாரியாகக் கேள்வி எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories