தமிழ்நாடு

“இவங்கதான் உடைஞ்ச பர்னிச்சர்களை சரிசெய்ய போறாங்களா?”- மதுவந்தி பிரசாரத்தால் அதிர்ச்சியில் பாஜக தொண்டர்கள்

கோவையில் நடைபெற்ற கலவரத்தை சரிக்கட்ட முடியால் திணறி வரும் பா.ஜ.க, தற்போது மதுவந்தியை பரப்புரைக்கு அழைத்திருப்பது பா.ஜ.கவினர் மத்தியிலேயே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

“இவங்கதான் உடைஞ்ச பர்னிச்சர்களை சரிசெய்ய போறாங்களா?”- மதுவந்தி பிரசாரத்தால் அதிர்ச்சியில் பாஜக தொண்டர்கள்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழகத்தில் வருகிற 6ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுவதையொட்டி, கடைசி கட்ட பிரச்சாரத்தில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். மக்கள் ஆதரவு மற்றும் கருத்துக்கணிப்பு வரை அனைத்துமே தி.மு.க மற்றும் கூட்டணி கட்சிகள் அமோக வெற்றி பெறும் எனத் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், தேர்தலில் எப்படியாவது வெற்றிபெறவேண்டும் என பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க கூட்டணி பல்வேறு குளறுபடிகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக பா.ஜ.க வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் முதல் பா.ஜ.கவின் முக்கிய தலைவர்கள் பலரும் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், தேர்தல் பரப்புரைக்காக உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யாநாத் கோவை வந்தபோது, விதிகளை மீறி பா.ஜ.கவினர் இருசக்கர வாகன பேரணி நடத்தினர். டவுன்ஹால் பகுதியில் செல்லும் போது அங்கு திறந்திருந்த கடைகளை அடைக்கச் சொல்லி பா.ஜ.கவினர் அராஜகத்தில் ஈடுபட்டனர்.

மேலும் அங்கிருந்த மசூதிக்கு அருகில் நின்று வெறுக்கத்தக்க வகையில் கோஷங்களையும் எழுப்பியுள்ளனர். இதனிடையே அங்கிருந்த காலணி கடையின் மீது பா.ஜ.கவினர் கற்களை வீசி கலவரத்தில் ஈடுபட்டனர். இதனால் மக்கள் மிகுந்த அச்சத்துடன் இருந்துள்ளனர்.

இதற்கிடையே பா.ஜ.க-வுக்கு ஆதரவாகப் பேசும் எஸ்.வி.சேகர், கே.டி.ராகவன், மதுவந்தி ஆகியோரை பிரச்சாரத்திற்கு அழைக்க அ.தி.மு.கவினர் தயக்கம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் கோவையில் நடைபெற்ற கலவரத்தை சரிகட்ட முடியால் தினறி வரும் பா.ஜ.க, தற்போது பா.ஜ.க-வுக்கு ஆதரவாகப் பேச மதுவந்தியை அழைத்துள்ளனர்.

தலித், இஸ்லாமியர்களுக்கு எதிராக தொடர்ந்து பேசி வரும் மதுவந்தியை தேர்தல் நேரத்தில் பேச அழைத்து வந்தது பா.ஜ.கவினர் மத்தியிலேயே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories