தமிழ்நாடு

தமிழர்களோடு சேர்ந்து #GoBackModi ட்ரெண்ட் செய்யும் பாஜக , அதிமுக அடிமைகள்!

தமிழகம் வரும் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து #GoBackModi டிவிட்டரில் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது.

தமிழர்களோடு சேர்ந்து #GoBackModi  ட்ரெண்ட் செய்யும் பாஜக , அதிமுக அடிமைகள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில், அரசியல் கட்சி தலைவர்களும், வேட்பாளர்களும் தீவிரமாகப் பரப்புரையை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், பா.ஜ.க மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காகப் பிரதமர் நரேந்திர மோடி இன்று தமிழகம் வருகிறார். மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக நேற்று இரவிலிருந்தே #GoBackModi என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

நீட், இந்தி திணிப்பு, விவசாய விரோத வேளாண் சட்டம், சிஏஏ உள்ளிட்ட மக்கள் விரோத சட்டங்களை அமல்படுத்தி வரும் மோடி அரசுக்கு எதிராக பல்வேறு தரப்பினரும் #GoBackModi என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்திப் பதிவிட்டு வருகின்றனர்.

தமிழர்களோடு சேர்ந்து #GoBackModi  ட்ரெண்ட் செய்யும் பாஜக , அதிமுக அடிமைகள்!

மேலும், பிரதமர் மோடி தமிழகம் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் கறுப்புக் கொடி காட்ட முடிவு எடுத்துள்ளனர். அதேபோல் தாராபுரம் வரும் பிரதமர மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அங்குள்ள விவசாயிகள் விளைநிலங்களில் கருப்பு பலூன்களை கட்டி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

கோவையில், மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி போராட்டம் நடத்திய தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாகக் கைது செய்துள்ளனர். அதேபோல் புதுச்சேரியில் மோடி வருகைக்காக 144 தடை உத்தரவும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி தமிழகம் வரும்போதெல்லாம் #GoBackModi என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகிவருவது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories