தமிழ்நாடு

"அ.தி.மு.க முகமூடி போட்டுத் திரியும் பா.ஜ.கவை ஒருபோதும் உள்ளே விடக்கூடாது" - பிரகாஷ் காரத் பேச்சு!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தமிழகத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கக்கூடிய தேர்தல் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் தெரிவித்துள்ளார்.

"அ.தி.மு.க முகமூடி போட்டுத் திரியும் பா.ஜ.கவை ஒருபோதும் உள்ளே விடக்கூடாது" - பிரகாஷ் காரத் பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை துறைமுகம் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் சேகர்பாபுவை ஆதரித்து ஏழுகிணறு பகுதியில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

இந்தக் கூட்டத்தில் பிரகாஷ் காரத் பேசுகையில், "தமிழக சட்டப்பேரவை தேர்தல், தமிழகத்தின் எதிர்காலத்தை மாற்றியமைக்கக்கூடிய மிக முக்கியமான தேர்தலுமாகும். நானும் கிட்டத்தட்ட 50 ஆண்டு காலமாகப் பொதுவாழ்வில் இருக்கிறேன். எனது அரசியல் வாழ்வும் தமிழகத்தில் தான் தொடங்கியது. குறிப்பாக 1967 -70களில் மாணவராக இருந்த காலம். 1967 ஆம் ஆண்டு தமிழகத்தில் முதல்முறையாக தி.மு.க ஆட்சிக்கு வந்தது, அது தமிழுக்கும் தமிழகத்தின் வளர்ச்சிக்கும் பாடுபட்ட அரசாகும்.

தமிழகத்தில் உள்ள எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க அரசு ஒரு அடிமை அரசாகும். இந்த அரசை ரிமோட் கண்ட்ரோல் மூலமாக மோடியும் அமித்ஷாவும் இயக்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்த அடிமை ஆட்சி நமக்குத் தேவையில்லை. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் இந்த அரசைத் தூக்கியெறியவேண்டும்.

"அ.தி.மு.க முகமூடி போட்டுத் திரியும் பா.ஜ.கவை ஒருபோதும் உள்ளே விடக்கூடாது" - பிரகாஷ் காரத் பேச்சு!

நாடாளுமன்றத்தில் மோடி அரசு விவசாயிகளுக்கு எதிரான மூன்று வேளாண் சட்டங்களைக் கொண்டுவந்தது. இதை ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் கடுமையாக எதிர்த்தன. ஆனால் அ.தி.மு.க மட்டும் ஆதரித்து வாக்களித்தது. மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து இன்றளவும் விவசாயிகள் டெல்லியில் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அ.தி.மு.க அரசு மத்திய மோடி அரசின் அனைத்து மக்கள் விரோத கொள்கைகளுக்கும் ஆதரவாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

மதச்சார்பின்மைக்கு எதிரான குடியுரிமை திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று கேரளா, ராஜஸ்தான் பஞ்சாப், சத்திஷ்கர் மாநில அரசுகள் அறிவித்துள்ளன. ஆனால் தமிழகத்தில் உள்ள அ.தி.மு.க அரசு மதச்சார்பின்மைக்கு எதிராக இருக்கக்கூடிய இந்தச் சட்டத்தை எதிர்க்காமல் ஆதரித்துக்கொண்டிருக்கிறது. இப்படி மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை எதிர்க்காமல் ஜால்ரா போடும் அரசாக அ.தி.மு.க அரசு உள்ளது.

தமிழகத்தில் பா.ஜ.க நேரடியாக வரவில்லை. அ.தி.மு.க என்ற முகமூடியை போட்டுக்கொண்டு வந்திருக்கிறது. பா.ஜ.க என்பது இந்தி மொழி, சமஸ்கிருத மொழியைத் தமிழக மக்கள் மீது திணிக்க முயற்சிக்கும் கட்சியாகும். இவர்கள் தமிழகத்தின் சமூக கலாச்சார பாரம்பரியத்திற்கு எதிரானவர்கள்.

50 ஆண்டுகால திராவிட கலாச்சாரம், திராவிட பாரம்பரியம் ஊறியுள்ள தமிழக மண்ணில் இதை நாம் அனுமதிக்க மாட்டோம். பா.ஜ.க நேரடியாக வந்தாலும் அ.தி.மு.க மேல் சவாரி செய்து வந்தாலும் அதை நாம் தமிழகத்தில் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்." என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories