தமிழ்நாடு

“வேலைக்காக - சோற்றுக்காக அலைய வேண்டிய நிலை வரும்; பாஜகவுக்கு ஏன் ஓட்டு போடக்கூடாது?”: ட்ரெண்டாகும் பதிவு!

தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க துடிக்கும் பா.ஜ.கவின் முயற்சியை முறியடிக்க சமூக ஆர்வலர்கள் , ஜனநாயக அமைப்பினர் பலரும் பா.ஜ.கவினருக்கு எதிராக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

“வேலைக்காக - சோற்றுக்காக அலைய வேண்டிய நிலை வரும்; பாஜகவுக்கு ஏன் ஓட்டு போடக்கூடாது?”: ட்ரெண்டாகும் பதிவு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப் பதிவு மார்ச் 27ல் துவங்கி ஏப்ரல் 29 வரை, மொத்தம் 8 கட்டங்களாக நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் பிப்ரவரி 26-ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது.

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளாவுக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 6ம் தேதியும், அசாமில் 126 தொகுதிகளுக்கு 3 கட்டங்களாகவும், மேற்குவங்க மாநிலத்தில் 294 தொகுதிகளுக்கு 8 கட்டங்களாகவும் வாக்குப் பதிவு நடைபெறும் என்று ஆணையம் கூறியிருந்தது. அதன்படி, ஐந்து மாநில சட்டப்பேரவைகளுக்கான முதற்கட்டத் தேர்தல் சனிக்கிழமையன்று துவங்கியது.

இதில், மேற்கு வங்கத்தில் 30 தொகுதிகள், அசாமில் 47 தொகுதிகள் என மொத்தம் 77 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றது. இந்நிலையில், மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க அரசு இந்த 5 மாநிலங்களில் தேர்தலில் வெற்றிப் பெற வேண்டும் என பல்வேறு வகையில் முயற்சித்து வருகிறது.

Modi one nation one election
Modi one nation one election

5 மாநிலங்களில் ஆட்சியை பிடிக்கவேண்டும் என முயற்சி செய்யும் பா.ஜ.கவின் முயற்சியை முறியடிக்க சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட ஜனநாயக அமைப்பினர் பலரும் பா.ஜ.கவினருக்கு எதிராக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்தொடர்ச்சியாக பா.ஜ.க ஆட்சி செய்யும் மாநிலங்களில், தற்போது உள்ள அவலங்களை அம்பலப்படுத்தி சமூக வலைதளங்களில் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

அந்தவகையில், பா.ஜ.க ஆட்சியை விமர்ச்சித்து சமூக வலைதளங்களில் வெளியான பதிவு வைராலகியுள்ளது. இதுதொடர்பாக வெளியான அந்த பதிவில், “பா.ஜ.க கூட்டணி ஆட்சிக்கு வந்தால், இவர்களைப் போலவே தமிழ்நாட்டு மக்கள் கூட்டம் கூட்டமாக வேலைக்காகவும் சோற்றுக்காகவும் வேறெங்கேனும் பெட்டி தூக்கிக் கொண்டு அலைய வேண்டிய நிலை வரும்” என எச்சரித்துள்ளனர்.

மேலும் அந்த பதிவில், “தமிழகத்தை பீமாரு (நோயாளி) ஆக்கி விடாதீர்கள்! பீமாரு (BIMARU) மாநிலங்கள் என்றொரு வழக்கு பயன்பாட்டில் உண்டு. இந்தி மொழியில் பீமார் என்றால் நோயாளி என்று பொருள். பீமாரு மாநிலங்கள் இந்தியாவின் நோயாளி மாநிலங்கள். பீகார், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்திரப் பிரதேசம் ஆகிய இந்த நான்கு மாநிலங்களின் பெயர்களை சுருக்கித்தான் பீமாரு என்கிறார்கள். இதில் ராஜஸ்தான் ஓரளவு மேலே வந்து விட்டது.

“வேலைக்காக - சோற்றுக்காக அலைய வேண்டிய நிலை வரும்; பாஜகவுக்கு ஏன் ஓட்டு போடக்கூடாது?”: ட்ரெண்டாகும் பதிவு!

இந்தியாவின் மற்ற மாநிலங்களிடமிருந்து கிடைக்கும் வருவாயையும், வளங்களையும் சுரண்டித் தின்றாலும் எப்போதும் நோயாளியாகவே இருக்கிற மாநிலங்கள் மத்தியப் பிரதேசம், பீகார், உத்திரப் பிரேதசம். வளர்ச்சி என்ற விஷயத்தில், தமிழகம் எப்படி இருக்கிறது. பா.ஜ.க ஆளும் மாநிலங்களான மத்தியப் பிரதேசம், உத்திரப் பிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்கள் எப்படி இருக்கின்றன என்று தெரிந்து கொள்ள வேண்டுமா?

இந்த உதாரணத்தைப் பாருங்கள்:

தொலைபேசி என்பது இன்று தவிர்க்க முடியாத அத்தியாவசிய சாதனமாகி விட்டது. குடிமக்கள் எல்லாருக்கும் ஆதார் அட்டை இருப்பதுபோல, ஒவ்வொரு ஆதாருக்கும் செல்பேசி இணைப்பும் இருந்தாக வேண்டும். இது உங்களுக்கும் தெரியும். மக்கள் தொகைக்கும் தொலைபேசிகளின் எண்ணிக்கைக்கும் தொடர்பு இருக்கும். இதை டெலிடென்சிடி என்பார்கள்.

அதாவது, ஓர் ஊரில் 100 பேர் இருக்கிறார்கள், அவர்களிடம் 85 போன்கள் இருக்கின்றன என்றால், டெலிடென்சிடி என்று அழைக்கப்படும். அந்த வகையில், இந்தியா முழுமைக்கும் சராசரி டெலிடென்சிடி 87 சதவீதம் உள்ளது, இதில் உச்சத்தில் இருப்பது டெல்லியில் 274 சதவீதமாக இருக்கிறது. குறிப்பாக டெல்லியில் நபர் ஒருவர் 2 அல்லது 3 போன்கள், நம்பர்கள் வைத்திருப்பது, லேண்ட்லைன் தொலைபேசிகள் வைத்திருப்பதோ போன்றவை இதன் காரணங்கள். அதேப்போல் தமிழ்நாட்டில் டெலிடென்சிடி 106.26 சதவீதமாகும்.

“வேலைக்காக - சோற்றுக்காக அலைய வேண்டிய நிலை வரும்; பாஜகவுக்கு ஏன் ஓட்டு போடக்கூடாது?”: ட்ரெண்டாகும் பதிவு!

அதேவேளையில், தொடர்ந்து பல ஆண்டுகளாக பா.ஜ.க ஆட்சி செய்து கொண்டிருக்கும் மத்தியப் பிரதேசத்தின் டெலி டென்சிடி 67.40 சதவீதமும், உத்திரப் பிரதேசம் 68.79 சதவீதமும், பீகாரில் வெறும் 53.11 சதவீதமும் உள்ளது. இதன் மூலம் பட்டியலிலேயே மிக மோசமான நிலையில், முதல் மூன்று இடங்களையும் பிடிப்பது பா.ஜ.க ஆளும் மாநிலங்கள்தான் என்பது தெளிவாகத் தெரிகிறது. இது இன்றைய நிலவரம்.

ஆனால், இது ஏதோ கொரோனாவின் காரணமாகத்தான் இப்படி என்று நினைத்து விடாதீர்கள். கொரோனா வருவதற்கு முந்தைய, கடந்த ஆண்டு மார்ச் மாத நிலவரப்படியும் இதேதான். மத்தியப் பிரதேசம் 67.4 சதவீதமும், உத்திரப் பிரதேசம் – 67.17 சதவீதமும், பீகார் 53.25 சதவீதமும் என்று தான் இருந்திருக்கிறது.

டெலிடென்சிடி அதிகமாக இருக்கிறது என்பது, மக்களிடையே செல்வ வளம், தொழில்வளம் வருவாய் அதிகமாக இருக்கிறது என்பதன் குறியீடாக சொல்லலாம். பா.ஜ.க கூட்டணிக்கு வாக்களித்தால் தமிழகமும் இந்த மாநிலங்களுடன் போட்டி போடும் நிலை நிச்சயம் வரும்.

இன்று வடக்கிலிருந்து கூட்டம் கூட்டமாக மக்கள் தமிழ்நாட்டுக்கு கூலி வேலைக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். பா.ஜ.க கூட்டணி ஆட்சிக்கு வந்தால், இவர்களைப் போலவே தமிழ்நாட்டு மக்கள் கூட்டம் கூட்டமாக வேலைக்காகவும் சோற்றுக்காகவும் வேறெங்கேனும் பெட்டி தூக்கிக் கொண்டு அலைய வேண்டிய நிலை வரும்” எனத் தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories