தமிழ்நாடு

“தாமரை மலராது என முழக்கமிட்ட இளைஞர் மீது பா.ஜ.க கும்பல் கொடூரமாக தாக்குதல்” : விருதுநகரில் அராஜகம்!

தமிழகத்தில் தாமரை மலராது என கூறிய இளைஞரை பா.ஜ.கவினர் அடித்து உதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“தாமரை மலராது என முழக்கமிட்ட இளைஞர் மீது பா.ஜ.க கும்பல் கொடூரமாக தாக்குதல்” : விருதுநகரில் அராஜகம்!
Kalaignar TV
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதையொட்டி, வேட்பாளர்களின் தேர்தல் பிரச்சார பரப்புரைகள் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் பாண்டுரங்கனை ஆதரித்து நடிகை நமிதா பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது தமிழகத்தில் தாமரை மலரும் என கூறினார். இதனைக் கூட்டத்திலிருந்து கேட்ட இளைஞர் ஒருவர், “தமிழகத்தில் தாமரை மலரவே மலராது” என முழக்கமிட்டார். மேலும் ஆட்சி அதிகாரத்தில் இருந்த பா.ஜ.கவும், அ.தி.மு.கவும் மக்களுக்கு என்ன செய்தது என கேள்வி எழுப்பினார்.

இதனால் ஆத்திரமடைந்த பா.ஜ.கவினர் இந்த இளைஞரைச் சரமாரியாக அடித்து உதைத்தனர். இதனால் பிரச்சாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் பா.ஜ.கவினரிடமிருந்து இளைஞரை மீட்ட காவல்துறையினர் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர்.

மனக்குமுறலை வெளிப்படுத்திய இளைஞர் மீது பா.ஜ.கவினர் தாக்குதல் நடத்தியதற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் இளைஞர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

banner

Related Stories

Related Stories