தமிழ்நாடு

சென்னை நகைக்கடையில் திடீர் ஐ.டி. ரெய்டு : 8 கிலோ தங்கம் பறிமுதல் விவகாரத்தில் விடிய விடிய சோதனை!

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 8 கிலோ தங்கம் பறிமுதல் செய்த நிலையில் சென்னை தனியார் நகைக்கடை நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை.

சென்னை நகைக்கடையில் திடீர் ஐ.டி. ரெய்டு : 8 கிலோ தங்கம் பறிமுதல் விவகாரத்தில் விடிய விடிய சோதனை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடந்த 24ஆம் தேதி ரயில்வே காவலர்கள் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கோயம்புத்தூரில் இருந்து சென்னை வந்த இன்டர்சிட்டி ரயிலில் பயணம் செய்தவரிடம் சோதனை செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், கோயம்புத்தூர் அசோக் நகர் விரிவாக்கம், பிரபு நகர், ராம் கௌரி நிவாஸ் பகுதியை சேர்ந்த திலிப் குமார் (51) என்பது தெரியவந்தது. மேலும் ரயில்வே போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அவர் 8 கிலோவிற்கு மேல் தங்கத்தை ரயிலில் கொண்டு வந்திருப்பது தெரியவந்தது.

அதனை தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் ஒப்படைக்கப்பட்டது. திலீப்குமாரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 8 கிலோ தங்க நகைகளின் மதிப்பு மூன்று கோடிக்கும் மேல் இருந்த காரணத்தினால் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வருமான வரி துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

சென்னை நகைக்கடையில் திடீர் ஐ.டி. ரெய்டு : 8 கிலோ தங்கம் பறிமுதல் விவகாரத்தில் விடிய விடிய சோதனை!

அதனைத் தொடர்ந்து வருமான வரித்துறையினர் கைப்பற்றப்பட்ட நகை குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.இந்த நிலையில், சென்னை யானைக்கவுனி என்எஸ்சி போஸ் சாலையில் அமைந்துள்ள டைமன் காம்ப்ளக்ஸில் முதல் தளத்தில் இயங்கி வரக்கூடிய ஸ்ரீ கே ஜே ஜுவல்லரி நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் இரவு 8 மணி முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சோதனையானது கடந்த 24ஆம் தேதி ரயில்வே போலீசாரால் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கைப்பற்றப்பட்ட 8 கிலோ தங்க நகை குறித்து நடத்தப்படுவதாக வருமான வரித்துறை அதிகாரிகள் முதற்கட்ட தகவல் தெரிவித்துள்ளனர்.

டிஎஸ்பி ஜெயச்சந்திரன் தலைமையில் 10 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வரும் இந்த சோதனையில் சில முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாகவும் அந்த ஆவணங்களின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் வருமானவரித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர்.

banner

Related Stories

Related Stories