தமிழ்நாடு

"கொரோனா பரிசோதனைக்கு இப்போ வரமுடியாது” : சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பிரேமலதா!

தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளதால் தற்போது கொரோனா பரிசோதனை செய்துகொள்ளமுடியாது என தே.மு.தி.க-வின் விருத்தாசலம் வேட்பாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.

"கொரோனா பரிசோதனைக்கு இப்போ வரமுடியாது” : சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பிரேமலதா!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்தில் தேர்தல் பரப்புரைகள் சூடுபிடித்துள்ள நேரத்தில், கொரோனா தொற்றின் பாதிப்பும் அதிகரித்துள்ளது. முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் பிரச்சாரம் செய்யும் இடங்களில் ஆயிரக்கணக்கான கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள் கூடுகின்றனர். இதனால், கொரோனா தொற்று அதிக அளவில் பரவுவதற்கான வாய்ப்பு உள்ளதாகக் கருதப்படுகிறது.

இநிலையில், கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தொகுதியில் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிடுகிறார். இதற்காக அவர் கடந்த 18ஆம் தேதி வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அப்போது அவருடன் எல்.கே.சுதிஷ் உடனிருந்தார்.

இதனைத் தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் தே.மு.தி.க துணை செயலாளர் சுதீஷுக்கு உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில், கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து எல்.கே.சுதீஷ் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். மேலும் அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

எல்.கே.சுதீஷுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து, விருத்தாசலத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த பிரேமலதா விஜயகாந்திடம், சுகாதாரத்துறை அதிகாரிகள், கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வரவேண்டும் என அழைப்பு விடுத்தனர். அப்போது, பிரேமலதா விஜயகாந்த், நான் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளதால் என்னால் வரமுடியாது, மாலை பார்த்துக்கொள்ளலாம் எனக் கூறி சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

banner

Related Stories

Related Stories