தமிழ்நாடு

“சென்னையில் கொரோனா தீவிரமாக பரவிவரும் 13 இடங்கள்” - பொதுமக்களுக்கு ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை!

தமிழகத்தில் கொரோனா வேகமாகப் பரவி வருவதாக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

“சென்னையில் கொரோனா தீவிரமாக பரவிவரும் 13 இடங்கள்” -  பொதுமக்களுக்கு ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை!
Admin
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்தில் அ.தி.மு.க அரசின் மெத்தன நடவடிக்கைகளால் மீண்டும் கொரோனா பாதிப்பு வெகுவாக அதிகரித்து வருகிறது. சில நாட்களுக்கு முன்னர் 500க்கும் குறைவாகத் தினசரி பாதிப்பு பதிவாகிவந்த நிலையில், கடந்த நான்கு நாட்களாக கொரோனா தொற்று ஆயிரத்தைக் கடந்து வருவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், தஞ்சாவூர், கோவை ஆகிய மாவட்டங்களில் கொரோனா தொற்றின் தாக்கம் வெகுவாக அதிகரித்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் 130க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில், தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவது குறித்துப் பேசப்பட்டுள்ளது.

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த ராதாகிருஷ்ணன், “தமிழகத்தில் கொரோனா வேகமாகப் பரவி வருகிறது. சென்னையில், கொளத்தூர், அம்பத்தூர் உள்ளிட்ட 13 இடங்களில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளது. எனவே சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கொரோனா பரிசோதனையை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் தஞ்சையில் வரும் நாட்களில் கொரோனா பரவல் படிப்படியாகக் குறையும்” எனத் தெரிவித்தார்.

மேலும், “தற்போது கொரோனா பரவல் வேகமாக இருப்பதால், தேர்தல் பரப்புரையில் ஈடுபடுபவர்கள் கொரோனா தடுப்பு விதிகளைப் பின்பற்றவில்லை என்றால், நடவடிக்கை எடுக்க தேர்தல் அதிகாரிகளுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது” எனவும் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories