தமிழ்நாடு

“ஐ.ஐ.டி-யில் தேர்ச்சி பெற்றும் இடம் கிடைக்காத மாணவர்களின் கதி என்ன?” : மோடி அரசுக்கு தி.மு.க MP கேள்வி !

ஐ.ஐ.டி நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்றும் பயில இடம் கிடைக்காத மாணவர்களின் நிலை என்ன? என்று மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலிடம் தி.மு.க எம்.பி தயாநிதி மாறன் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.

“ஐ.ஐ.டி-யில் தேர்ச்சி பெற்றும் இடம் கிடைக்காத மாணவர்களின் கதி என்ன?” : மோடி அரசுக்கு தி.மு.க MP கேள்வி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மத்திய சென்னை தொகுதி தி.மு.க எம்பி.யான தயாநிதி மாறன், மக்களவையில் கேள்வி நேரத்தில் மத்திய கல்வி அமைச்சரிடம் எழுப்பி கேள்வியில், “ஐ.ஐ.டி நுழைவு தேர்வில் எஸ்.சி, எஸ்.டி, இதர பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் பிரிவை சேர்ந்த மாணவர்கள் மொத்தம் எத்தனை பேர் தேர்வு எழுதினார்கள்.

அதில், எத்தனை சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர் என்பதை பிரிவு வாரியாக தெரிவிக்க வேண்டும். இந்த நுழைவுத் தேர்வில் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் எத்தனை பேர் தேர்ச்சி பெற்றனர். அதில், எத்தனை மாணவர்களுக்கு கல்லூரிகளில் சேர இடம் கிடைத்தன என்பதையும் பிரிவு வாரியாக தெரியப்படுத்த வேண்டும்.

நாடு முழுவதும் எஸ்.சி, எஸ்.டி, இதர பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் பிரிவை சேர்ந்த மாணவர்கள் மொத்தம் எத்தனை பேர் ஐ.ஐ.டி நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றும், கல்லூரிகளில் பயில இடம் கிடைக்கவில்லை. அப்படியிருக்கும் பட்சத்தில் இதற்கான காரணத்தை தெரியப்படுத்தவும்.

ஐ.ஐ.டி நுழைவு தேர்வில் ஏழை மாணவர்களும், பட்டியலினத்தை சேர்ந்த மாணவர்களும் தேர்ச்சி பெறும் வகையில் அவர்களுக்கு ஏதேனும் பயிற்சி மையங்கள் அல்லது இதர வசதிகள் ஏற்படுத்தி தர மத்திய அரசு முன்வந்துள்ளதா என தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கேள்விகள் எழுப்பியுள்ளார்.

banner

Related Stories

Related Stories