தமிழ்நாடு

“வயதான பெண்களை குறிவைத்து நூதன முறையில் கைவரிசை காட்டிய கொள்ளையன்” : போலிஸிடம் சிக்கியது எப்படி?

சென்னையில் மூதாட்டியிடம் நூதன முறையில், நகை கொள்ளையடித்து வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“வயதான பெண்களை குறிவைத்து நூதன முறையில் கைவரிசை காட்டிய கொள்ளையன்” : போலிஸிடம் சிக்கியது எப்படி?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை, தாண்டவராயன் தெருவைச் சேர்ந்தவர் மூதாட்டியான வீரசின்னம்மாள். இவர் மீன் வாங்குவதற்காகக் கடந்த 15ம் தேதி தண்டையார்பேட்டையில் உள்ள சந்தைக்குச் சென்றார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர், “நான் உங்கள் மகனின் நண்பன், என்னுடைய மைத்துனருக்குத் திருமணம் நடைபெற உள்ளதால், உங்கள் தாலிச் செயினை போல ஒரு புதிய செயின் செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார்.

மூதாட்டியான வீரசின்னம்மாளும், மகனின் நண்பன் என்பதால், அந்த இளைஞரிடம், 7 சவரன் தாலிச் செயினை கழற்றி காண்பித்துள்ளார். பிறகு வீரசின்னம்மாளிடம், இந்த மாடலை தங்க நகை செய்யும் இடத்தில் காண்பிக்க வேண்டும், எனவே நீங்கள் என்னுடன் வாருங்கள் என அவரை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார்.

பின்னர், நகைக்கடைக்கு வந்த இளைஞர், கொரோனா தொற்று அதிகம் இருப்பதால் நீங்க இங்கேயே இருங்க, நான் மட்டும் போய் நகையை காண்பித்து விட்டு வந்துவிடுகிறேன் என வீரசின்னம்மாளிடம் கூறிவிட்டு அந்த இளைஞர் சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும், மகனின் நண்பர் என கூறிய இளைஞர் வராததால் நகைக்கடைக்கு உள்ளே சென்று வீரசின்னம்மாள் தேடியுள்ளார். ஆனால் அவர் கடையில் எங்குமே இல்லை. இதனால் பீதியடைந்து வீட்டிற்குச் சென்று நடந்தவற்றைக் கூறியுள்ளார்.

“வயதான பெண்களை குறிவைத்து நூதன முறையில் கைவரிசை காட்டிய கொள்ளையன்” : போலிஸிடம் சிக்கியது எப்படி?

இதையடுத்து, வீரசின்னம்மாள் இதுகுறித்து தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர், சம்பவ இடத்திலிருந்த சி.சி.டி.வி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் வீரசின்னம்மாளை இளைஞர் பைக்கில் அழைத்துச் செல்லும் காட்சி பதிவாகியிருந்ததது.

இதனைத் தொடர்ந்து போலிஸார், இளைஞர் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தைக் கொண்டு விசாரணை செய்தனர். விசாரணையில் அந்த இளைஞரின் பெயர் சிவகுமார் என்றும் சென்னை கோடம்பாக்கம், பாரதீஸ்வரர் காலனிய சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. பின்னர் அவரை போலிஸார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், வீரசின்னம்மாளைப் போல இன்னும் இரண்டு மூதாட்டிகளை ஏமாற்றி நகைகளைப் பறித்ததும் தெரியவந்தது. இதையடுத்து சிவகுமாரை கைது செய்த போலிஸார் அவரிடமிருந்து 16.5 சவரன் தங்க நகைகளைப் பறிமுதல் செய்தனர்.

மேலும், தொடர் விசாரணையில் சென்னையில் தொடர்ச்சியாக மூதாட்டிகளைக் குறிவைத்து, அவர்களை நம்பவைத்து கொள்ளையடித்து வந்ததாக சிவகுமார் போலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories