தமிழ்நாடு

மீண்டும் ஊரடங்கு?.. முன்னுக்குப் பின் முரணாகப் பேசிய அமைச்சர், அதிகாரிகள்?: மக்களை குழப்பும் அதிமுக அரசு!

தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதில் மெத்தனம் காட்டிய அ.தி.மு.க அரசின் தவறை மறைப்பதற்காக முன்னுக்குபின் முரணாக தகவல் அளித்து வருவது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மீண்டும் ஊரடங்கு?.. முன்னுக்குப் பின் முரணாகப் பேசிய அமைச்சர், அதிகாரிகள்?: மக்களை குழப்பும் அதிமுக அரசு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

இந்தியாவில் கொரோனா பரவல் மீண்டும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்களின் தமிழகமும் ஒன்று. கடந்த காலங்களில் 300 - 500 ஆக இருந்த கொரோனா பாதிப்பு கடந்த 3 வார இடைவேளியில் 1,000ஐ நெருங்கியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் இந்த அரசாங்கம் காட்டிய அலட்சியத்தால்தான் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில் அரசு பழிவிழுந்துவிடும் என அதிகாரிகள் மட்டும் பேசப்பட்ட நிலையில், அமைச்சர் மாஃ.பா.பாண்டியராஜன் முன்னுக்குப்பின் முரணாக பேச்சால் சுகாதாரத்துறை செயலாளருக்கு கடும் நெருக்கடி ஏற்படுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தினசரி தொற்று பாதிப்பு அதிகரிக்க தொடங்கியதைத் அடுத்து நேற்று தமிழக தலைமைச் செயலாளர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். இதையடுத்து கொரோனா பரவி வருவதால், பொதுமக்கள் முகக்கவசம் அணியவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

மீண்டும் ஊரடங்கு?.. முன்னுக்குப் பின் முரணாகப் பேசிய அமைச்சர், அதிகாரிகள்?: மக்களை குழப்பும் அதிமுக அரசு!

இந்நிலையில், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தமிழகத்தில் முன்பு பரவிய கொரோனா வைரஸ் தொற்றே தற்போது பரவி வருகிறது. இதில் புதிய வகை கொரோனா வைரஸ் தமிழகத்தில் பரவவில்லை.

மேலும், தற்போது அரசியல் பிரசார கூட்டங்களில் மக்கள் அதிக அளவு பங்கேற்பதால், நோய்த்தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதேபோல், தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு என பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம். ஆனால், அதேநேரம் மக்கள் முன்னெச்சரிக்கையின்றி அலட்சியமாக இருக்க வேண்டாம்” எனத் தெரிவித்துள்ளார்.

இதனிடையே இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன் தமிழ்நாட்டில் கொரோனா தொற்று இரண்டாவது அலை பரவினால், மீண்டும் முழு முடக்கம் அமல்படுத்தப்பட வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளார்.

அதிகாரிகள் ஊரடங்கு மீண்டும் ஊரடங்கிற்கு வாய்ப்பு இல்லை என கூறிவரும் வேளையில் ஆளும் கட்சி அமைச்சர்கள்

தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதில் மெத்தனம் காட்டிய அ.தி.மு.க அரசு, தனது தவறை மறைப்பதற்காக முன்னுக்குபின் முரணாக தகவல் அளித்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

banner

Related Stories

Related Stories