தமிழ்நாடு

ஆட்டோவில் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட உதயநிதி ஸ்டாலின் : உற்சாக வரவேற்பு கொடுத்த மக்கள்!

ஆட்டோவில் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட உதயநிதி ஸ்டாலினை உற்சாகமாக வரவேற்று கொண்டாடி தீர்த்த சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி பகுதி மக்கள்.

ஆட்டோவில் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட உதயநிதி ஸ்டாலின் : உற்சாக வரவேற்பு கொடுத்த மக்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி தேர்தல் பணிமனை அலுவலகத்தை தி.மு.க இளைஞரணி செயலாளரும், அப்பகுதி வேட்பாளருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார். 119 அ வட்டம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த தேர்தல் பணிமனைக்கு வருகை தந்த உதயநிதி ஸ்டாலினை பட்டாசு வெடித்தும், மேள தாளம் முழங்கவும் அப்பகுதி மக்கள் ஏராளமானோர் வரவேற்றனர். உடன் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் உள்பட கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் இருந்தனர்.

அதனை தொடர்ந்து மெரினா கடற்கரை அருகே உள்ள அயோத்தியா நகர் குடிசை மாற்று வாரிய பகுதியில் ஆட்டோவில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட உதயநிதி ஸ்டாலினுக்கு ஏராளமான பெண்கள் மலர் தூவி வரவேற்பு அளித்தனர். இளைஞர்கள், பெண்கள் என ஏராளமானோர் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். உதயநிதி ஸ்டாலின் உடன் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் உடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின், “ஊழலில் தளைத்துள்ள மாநில அரசுக்கு நாம் பாடம் புகட்ட வேண்டும். கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்திற்கு எவ்வித பயனும் இல்லாத அரசாக அ.தி.மு.க அரசு இருக்கின்றது. இங்கே ஆளும் அ.தி.மு.க அரசு தமிழகத்தின் உரிமைகளை டெல்லியில் கொண்டு அடகு வைத்துள்ளனர். தி.மு.க தலைவர் அவர்கள் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவற்றை நிறைவேற்ற, அனைவரும் ஏப்ரல் 6 அன்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளை அளியுங்கள் என்றார்.

ஆட்டோவில் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட உதயநிதி ஸ்டாலின் : உற்சாக வரவேற்பு கொடுத்த மக்கள்!

தொடர்ந்து திருவல்லிக்கேணி பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட உதயநிதி ஸ்டாலினை வீதி முழுவதும் மக்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்து கொண்டாடினர். ஆளும் அரசின் அலட்சியப்போக்கையும், அவர்களின் குறைகளையும் எடுத்துரைத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தொடர்ந்து திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள தேரடி தெரு உள்ளிட்ட பல்வேறு தெருக்களில் வாக்கு சேகரித்த உதயநிதி ஸ்டாலிப், ஜாம்பஜார் பகுதியில் உள்ளவர்களிடம் பிரச்சாரம் செய்தார்.

மோடியின் அடிமையாக உள்ள எடப்பாடி, ஓபிஎஸ்-யை ஒழித்துக்கட்டுவோம் என்றும், நாடாளுமன்ற தேர்தலை போல், இந்த சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக விற்கு அடிகொடுத்து வெற்றியை ஈட்டுவோம் என்றும் பேசினார். உதயநிதியின் இந்த பிரச்சாரத்தில், காங்கிரஸ், ம.தி.மு.க, ஐ.யூ.எம்.எல் உள்ளிட்ட தோழமை கட்சியை சேர்ந்தவர்கள், தி.மு.க தொண்டர்கள், நிர்வாகிகள், மகளிர் என ஏராளமானோர் இருந்தனர்.

banner

Related Stories

Related Stories