தமிழ்நாடு

தனியார் துறையில் இடஒதுக்கீடு சாத்தியமா? : சிரிக்கும் சங்கிகள் தெரிந்துகொள்ள வேண்டிய வரலாறு!

“எப்போதெல்லாம் தி.மு.க அதிகாரத்தில் இருக்கிறதோ அப்போதெல்லாம் முக்கியமான சமூக மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது.”

தனியார் துறையில் இடஒதுக்கீடு சாத்தியமா? : சிரிக்கும் சங்கிகள் தெரிந்துகொள்ள வேண்டிய வரலாறு!
Admin
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலின் கதாநாயகனான தி.மு.க தேர்தல் அறிக்கை 2021 குறித்த விவாத நிகழ்ச்சி தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்றது.

அந்நிகழ்ச்சியில் பங்கேற்ற சமூக - பொருளாதார அறிஞர் ஜெ.ஜெயரஞ்சன் பேசுகையில், “எப்போதெல்லாம் தி.மு.க அதிகாரத்தில் இருக்கிறதோ அப்போதெல்லாம் முக்கியமான சமூக மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும், சமூக நீதி, பொருளாதார முன்னேற்றம், வேலைவாய்ப்பு வளர்ச்சி என ஒவ்வொரு துறைகளும் முன்னேற்றப்பட்டுள்ளன.

அதன் தொடர்ச்சியாகவே, இப்போதும் தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருக்கிறது தி.மு.க. தனித்தனியாகப் பார்த்தால் 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளாக இருக்கும் தேர்தல் அறிக்கையில் மையச்சரடு என்பது ஒவ்வொன்றிலும் உள்ள முன்னேற்றம்தான்.

ஆய்வுகளின்படி, பெண்கள் வேலைக்குச் செல்வது குறைந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகளிருக்கு 12 மாத பேறுகால விடுமுறை, நகர்ப் பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயண, மாதம்தோறும் 1,000 ரூபாய் உரிமைத்தொகை என பெண்களுக்கான இந்தத் திட்டங்களின் மூலமாக அவர்களுக்கான வேலைவாய்ப்புகள் அதிகரிக்கச் செய்யப்படும்.

தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள வாக்குறுதிகளின் சாத்தியத்தன்மை குறித்து விமர்சிக்கப்படுகிறது. 1967ல் மூன்று படி அரிசி 1 ரூபாய்க்குத் தருவோம் என வாக்குறுதி அளித்தபோது, அதைச் செய்யமுடியாது என்றார்கள். ஆனால், நிகழ்த்தப்பட்டது.

சத்துணவு திட்ட வாக்குறுதி அளித்தபோது, இந்திய ஒன்றிய அரசே அது சாத்தியமில்லை என்றது. ஆனால், இன்று நாடு முழுவதும் அந்தத் திட்டம் விரிவாக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு, லட்சியத் திட்டங்களே நாட்டுக்கு வழிகாட்டியாக இருக்கின்றன.

தேர்தல் வாக்குறுதிகள் என்பவை மாற்றத்திற்கான வழிகாட்டி அறிக்கை. நீதிக்கட்சி ஆட்சி முதல் தி.மு.க ஆட்சி வரை இதுவே நிகழ்ந்து வருகிறது. எல்லாமும் வளர்ச்சி நோக்கிய பயணத்தில் சாத்தியப்படக்கூடியவையே.

மாற்றமும், முன்னேற்றமும் எல்லையற்றதொரு பயணம். பயணங்களை நோக்கி வழிநடத்துபவை லட்சியங்களே. அவ்வாறான லட்சியங்களை எடுத்துரைப்பவை இந்த வாக்குறுதிகள்” எனத் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories