தமிழ்நாடு

"ஒன்றாக இணைந்துள்ள சாதி-மத-ஊழல்வாதிகளுக்கு இந்த தேர்தலில் முடிவுகட்ட வேண்டும்" - கரு.பழனியப்பன் பேச்சு!

அ.தி.மு.க கூட்டணியை இந்தத் தேர்தலில் தோற்கடித்து தமிழகத்தை மீட்க வேண்டும் என இயக்குநர் கரு.பழனியப்பன் தெரிவித்துள்ளார்.

"ஒன்றாக இணைந்துள்ள சாதி-மத-ஊழல்வாதிகளுக்கு இந்த தேர்தலில் முடிவுகட்ட வேண்டும்" -  கரு.பழனியப்பன் பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தி.மு.க கூட்டணியின் தொகுதி பங்கீடு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. அ.தி.மு.க கூட்டணியிலிருந்து தே.மு.தி.க வெளியேறியதால் தொகுதி பங்கீட்டை முடிக்க முடியாமல் திண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், சாதி, மதம், ஊழல் எல்லாம் ஒன்று சேர்ந்து தேர்தலைச் சந்திக்கிறது. இவர்களை இந்தத் தேர்தலில் தோற்கடித்து ஆட்சியிலிருந்து வெளியேற்ற வேண்டும் என இயக்குநர் கரு.பழனியப்பன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்," தமிழகத்திலிருந்து புறம் தள்ளவேண்டியவர்கள் எல்லோரும் ஒரே அணியில் சேர்ந்துள்ளனர். சாதி, மதம், ஊழல் என எல்லோரும் ஒன்று கூடியிருக்கிறார்கள். இவர்களுக்கு எப்போதும் மக்கள் மீது அக்கறை கிடையாது.

"ஒன்றாக இணைந்துள்ள சாதி-மத-ஊழல்வாதிகளுக்கு இந்த தேர்தலில் முடிவுகட்ட வேண்டும்" -  கரு.பழனியப்பன் பேச்சு!

ஆனால், மற்றொரு அணியில் இருப்பவர்கள் மாநிலம், மொழி, மக்கள் மீதும் அக்கறை கொண்டவர்கள். தமிழகத்தில் இந்தத் தேர்தலில் தான் யார் மக்கள் மீது அக்கறை கொண்டவர்கள்? யார் அக்கறையற்றவர்கள் என்பது தெள்ளத்தெளிவாக புலப்படுகிறது. அ.தி.மு.க அரசின் 10 ஆண்டுகால ஆட்சியில் தமிழகம் சிதைந்துவிட்டது. இந்தத் தேர்தலில் சாதி - மத - ஊழல்வாதிகளைத் தூக்கி எறியவில்லை என்றால் தமிழகத்தை இவர்கள் ஒட்டுமொத்தமாகச் சிதைத்து விடுவார்கள்.

பா.ஜ.க எப்போதும் எளிய மக்களுக்காகக் குரல் கொடுத்ததே கிடையாது. தூத்துக்குடியில் துப்பாகிச்சூடு நடந்தபோதும், அனிதா இறந்தபோதும் பேசாத பா.ஜ.க, சட்டமன்றம் சென்று என்ன பேசப் போகிறது? பா.ஜ.கவின் குரல் எப்போதும் சாமானிய மக்களுக்காக இருந்தது கிடையாது. அது அவர்களின் கொள்கையும் கிடையாது" எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories