தமிழ்நாடு

“மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரின் வேண்டுகோளை ஏற்று வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ்” : தொ.மு.ச சண்முகம் பேட்டி!

போராட்டத்தின் மூன்றாவது நாளான இன்று போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

“மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரின் வேண்டுகோளை ஏற்று வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ்” : தொ.மு.ச சண்முகம் பேட்டி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

14வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே நடத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொ.மு.ச சி.ஐ.டி.யு உள்ளிட்ட ஒன்பது தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் இன்று மூன்றாவது நாளாக நடைபெற்ற நிலையில் இன்றைய தினம் மதியம் டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள தொழிலாளர் நல ஆணையர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு பல்லவன் இல்லத்தில் போக்குவரத்து ஊழியர்களை ஆலோசித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த தொ.மு.ச பொதுச்செயலாளர் சண்முகம் எம்.பி பேசியதாவது:

“மூன்று நாட்களாக தொடர்ந்த போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் திரும்பப் பெறப்படுகிறது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து இருப்பதால் போராட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என பேச்சுவார்த்தையின் போது கேட்டுக் கொண்டனர்.

அதேபோல் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட சில அரசியல் கட்சித் தலைவர்களும் போராட்டத்தை ஒத்தி வைக்குமாறு கேட்டுக் கொண்டதால் மூன்று நாட்களாக தொடர்ந்த வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெறுகிறோம். போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் நாளை பணிக்கு திரும்புவார்கள்” எனத் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories