தமிழ்நாடு

“அமைச்சருக்கு லஞ்சம் கொடுங்கள்; வேலை உறுதி” - பேரம் பேசும் ஆடியோவை ஒலிபரப்பி விளாசிய மு.க.ஸ்டாலின்!

சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணனுக்காக அ.தி.மு.க நிர்வாகி வெளிப்படையாக லஞ்சம் கேட்கும் ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவிக்கொண்டிருக்கிறது.

“அமைச்சருக்கு லஞ்சம் கொடுங்கள்; வேலை உறுதி” - பேரம் பேசும் ஆடியோவை ஒலிபரப்பி விளாசிய மு.க.ஸ்டாலின்!
Vignesh
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணனுக்காக அ.தி.மு.க நிர்வாகி வெளிப்படையாக லஞ்சம் கேட்கும் ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவிக்கொண்டிருக்கிறது.

அந்த ஆடியோவில் பேசும் ஒருவர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களிடம் தொடர்பு கொண்டு பேசுகிறார். “எனது வீடு அமைச்சர் வீட்டுக்குப் பின்னால்தான் இருக்கிறது. அமைச்சர் சொந்த ஊர் கவுந்தபாடி தான். ஒரு டோக்கன் மாதிரி பணத்தைக் கொண்டு வந்து அமைச்சர் கருப்பண்ணனிடம் கொடுத்து விடுங்கள். மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் பணி வாங்கி தருகிறோம்” எனத் தொடர்ந்து பேசுகிறார்.

ஆட்சிக்காலம் நிறைவடையப்போகும் நேரத்திலும், லஞ்சம் பெற வெறியோடு துடிக்கும் அ.தி.மு.க ஊழல் பெருச்சாளிகளின் முகத்திரையைக் கிழித்திருக்கிறது இந்த ஆடியோ. இதுகுறித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாகச் சாடியுள்ளார்.

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று ஈரோடு மாவட்டம், பெருந்துறை – விஜயமங்கலம் நான்குவழி நெடுஞ்சாலை, கடப்பமடை கலைஞர் திடலில் நடைபெற்ற “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற மக்களின் குறைகேட்கும் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியில் பங்கேற்று, மக்கள் அளித்த கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டு, அவர்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.

அப்போது பேசிய அன்னபூரணி என்ற பெண், புதிதாக பிறந்த குழந்தைக்கு ஜாதி சான்றிதழ் வேண்டும் என்று விண்ணப்பித்தால் 3,000 ரூபாய் லஞ்சம் கேட்கிறார்கள் என்றும், தனது சகோதரி புதிய முகவரியில் ரேஷன் கார்டிற்கு விண்ணப்பித்ததால் 5,000 ரூபாய் லஞ்சம் கேட்கிறார்கள் என்றும் புகார் தெரிவித்தார்.

அவருக்கு பதிலளித்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், “ஜாடிக்கு ஏத்த மூடியாக இந்த ஆட்சியாளர்களுக்கு ஏற்ற வகையில் கீழ்நிலையிலும் பலர் இப்படி இருக்கிறார்கள். சான்றிதழ்கள், ரேஷன் கார்டு போன்றவற்றை எந்தவித லஞ்சம் இல்லாமல் எளிமையாக பெறுவதற்கான வழிமுறைகள் தி.மு.க ஆட்சியில் நிச்சயமாக ஏற்படுத்தப்படும். உங்கள் குழந்தையின் சாதிச் சான்றிதழ் பெற்றுத் தருவதற்கு நம்முடைய கழகத் தோழர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள் என்ற உறுதியை சொல்லிக்கொள்கிறேன்.

அதுமட்டுமின்றி இன்னொரு தகவல். லஞ்சம் கேட்பது பற்றிய பிரச்சினை வந்ததனால் குறிப்பிட்டு சொல்கிறேன். இந்த மாவட்டத்தைச் சேர்ந்த சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஒருவர் இருக்கிறார், கே.சி.கருப்பண்ணன். அவருடைய துறையில் நியமனம் செய்ய வெளிப்படையாக லட்சம் கேட்கும் ஆடியோ ஒன்று இப்போது சமூக வலைதளங்களில் பரவிக்கொண்டிருக்கிறது.

அந்த ஆடியோவில் கேட்டீர்கள் என்றால் தெரியும், எனது வீடு அமைச்சர் வீட்டுக்குப் பின்னால் இருக்கிறது. அமைச்சர் சொந்த ஊர் கவுந்தபாடி தான். அமைச்சர் ஈரோடு தான். என்னுடைய பெர்சனல் நம்பரை எழுதிக்கொள்ளுங்கள். ஒரு டோக்கன் மாதிரி கொண்டு வந்து அமைச்சரிடம் கொடுத்து விடுங்கள். என்றெல்லாம் கூறி மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் பணி வாங்கி தருவதாக ஒரு பெண்ணிடம் பணம் கேட்கிறார், யார்? அ.தி.மு.க.வைச் சேர்ந்த ஒரு நிர்வாகி. இதுபோல தொடர்ந்து பேசுகிறார். அந்தப் பெண் தன்னுடைய பணி ஆணை கையில் வந்தவுடன் தருகிறேன் என்று சொல்லி இருக்கிறார்.

(இதுகுறித்த ஆடியோ மக்கள் மத்தியில் ஒலிபரப்பப்பட்டது)

ஒவ்வொரு துறையிலும் நியமனம், பணியிடமாற்றம், டெண்டர் எல்லாவற்றிலும், இன்னும் 3 மாதம்தான் இருக்கின்ற காரணத்தினால் கொள்ளையடித்து விட்டு செல்ல வேண்டும் என்று திட்டமிட்டு செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். 3 மாதத்தில் நாம் தான் ஆட்சிக்கு வரப் போகிறோம். வந்தவுடன் இதேபோல தவறிழைக்கும் அனைவரையும் தண்டித்து உடனே அவர்களை சிறையில் அடைப்பது தான் நம்முடைய முதல் வேலையாக இருக்கப் போகிறது.” என உறுதியளித்தார்.

banner

Related Stories

Related Stories