தமிழ்நாடு

எரிபொருள் விலை உயர்வு : மோடி அரசை கண்டித்து கேஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து சங்கு ஊதி நூதன போராட்டம்!

சவப்பெட்டியில் சிலிண்டருக்கு மாலை அணிவித்து, சங்கு ஊதி எஸ்.டி.பி.ஐ கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எரிபொருள் விலை உயர்வு : மோடி அரசை கண்டித்து கேஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து சங்கு ஊதி நூதன போராட்டம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

நாளுக்கு நாள் உயர்ந்திடும் பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து எஸ்.டி.பி.ஐ கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை இராயபுரம் தொகுதிக்குட்பட்ட வண்ணாரப்பேட்டை பாண்டியன் திரையரங்கம் அருகே எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சவப்பெட்டியில் சிலிண்டரை வைத்து மாலை அணிவித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். மேலும் மண் அடுப்பில் விறகு வைத்தும் சிலிண்டரில் மோடி படத்தை வைத்தும் கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.

போராட்டத்தில் நூற்றுக்கு மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு, 2014 மற்றும் 2021ஆம் ஆண்டில் எரிபொருள் விலை நிலவரத்தை விளக்கும் படம், கார்ட்டூன்கள் இடம்பெற்ற பதாகைகளை கையில் ஏந்தி மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

மேலும் இருசக்கர வாகனம், ஆட்டோ, சிலிண்டர் உள்ளிட்ட பொருட்களுக்கு மாலை அணிவித்து சங்கு ஊதி இறுதி அஞ்சலி செலுத்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

banner

Related Stories

Related Stories