தமிழ்நாடு

“குண்டும் குழியுமாக சீர்கெட்டுப்போன சென்னை” : சாலையில் ஏற்படும் திடீர் பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அச்சம் !

மத்திய கைலாஷ் சிக்னலில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில், ரேஷன் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“குண்டும் குழியுமாக சீர்கெட்டுப்போன சென்னை” : சாலையில் ஏற்படும் திடீர் பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அச்சம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னையின் மிக முக்கியமான சாலைகளில் ஒன்று மத்திய கைலாஷ் சாலை. இந்த சாலையின் சிக்னல் அருகே கடந்த 13ம் தேதி திடீரென மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டது. இது பற்றி தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு சாலை ஓரத்தில் கழிவு நீர் கொண்டு செல்வதற்கு ராட்சத குழாய் பொருத்தப்பட்டுள்ளது. இந்த குழாயின் வாயு அழுத்தத்தால், கழிவுநீர் குழாயில் வெடிப்பு ஏற்பட்டு சாலையில் பள்ளம் உருவாகியது என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, அந்தப் பள்ளத்தை மாநகராட்சி ஊழியர்கள் சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை 6 மணி அளவில் தண்டையார்பேட்டையில் இருந்து தரமணிக்கு 100 மூட்டை ரேஷன் அரிசியை ஏற்றிக் கொண்டு லாரி அந்த வழியாக வந்தது.

“குண்டும் குழியுமாக சீர்கெட்டுப்போன சென்னை” : சாலையில் ஏற்படும் திடீர் பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அச்சம் !

அப்போது, அந்தப் பள்ளத்தில் லாரி சிக்கிக் கொண்டு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் லாரியில் இருந்த அரிசி மூட்டைகள் சாலையில் சிதறி விழுந்தன. மேலும் காலை நேரம் என்பதால் பெரிய விபத்து எதுவும் ஏற்படவில்லை

மத்திய கைலாஷ் சாலைகளில் இது போன்று அடிக்கடி பள்ளம் ஏற்படுவதாகவும், அதை உரிய முறையில் மாநகராட்சி அதிகாரிகள் சரி செய்யாமல், மணல் மற்றும் கற்கலைக் கொண்டு அப்படியே மூடி விடுவதால் இது போன்ற பள்ளம் ஏற்படுவது தொடர் கதையாகி வருவாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கூட அண்ணாசாலையில் திடீரென பெரிய பள்ளம் ஏற்பட்டது, இதில் கார் மற்றும் மாநகரப் பேருந்து கவிழ்ந்து பள்ளத்தில் சிக்கிக் கொண்டது. இப்படி சென்னையில் உள்ள முக்கிய சாலைகளில் அடிக்கடி பெரிய பள்ளங்கள் உருவாகிறது.

“குண்டும் குழியுமாக சீர்கெட்டுப்போன சென்னை” : சாலையில் ஏற்படும் திடீர் பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அச்சம் !

மேலும், சென்னையில் உள்ள அனைத்து சாலைகளும் குண்டும், குழியுமாக மோசமான நிலையில் இருக்கிறது. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. முக்கிய தலைவர்கள் வரும் போது, அவர்கள் செல்லும் சாலைகளை உடனே சரியும் அ.தி.மு.க அரசு, மக்கள் தினந்தோறும் பயன்படுத்தும் சாலைகளை உரிய முறையில் பராமரிக்காமல் இருக்கிறது என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

banner

Related Stories

Related Stories