தமிழ்நாடு

இலவச அமரர் ஊர்தி வராததால் சரக்கு வண்டியில் சடலத்தை எடுத்துச் சென்ற கொடூரம் : எடப்பாடி ஆட்சியின் அவலம் !

திருவள்ளூர் அருகே இருசக்கர வாகனம் மீது கன்டெய்னர் லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த 2 பேரின் சடலத்தை எடுத்துச் சென்ற அவலத்தை கண்டித்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இலவச அமரர் ஊர்தி வராததால் சரக்கு வண்டியில் சடலத்தை எடுத்துச் சென்ற கொடூரம் : எடப்பாடி ஆட்சியின் அவலம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

திருவள்ளூர் அரசு தலைமை தபால் நிலையம் அருகே திருவள்ளூர் புங்கத்தார் பகுதியை சேர்ந்த ஜெயபால். இவரது மகன் செல்வராஜ் மற்றும் பத்தியால்பேட்டை ஏழுமலை என்பவரது மகன் அஜித் இருவரும் கட்டிட வேலை செய்துவந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று வேலை முடித்து விட்டு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தை முந்திச் செல்ல முயன்ற மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த கன்டெய்னர் லாரி இருசக்கர வாகனம் மீது மோதியதில் சுமார் நூறு மீட்டர் அளவிற்கு இழுத்துச் செல்லப்பட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் அடிபட்ட இருவரும் உயிரிழந்ததை அறிந்து திரும்பிச் சென்றதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த இருவரையும் மீட்பதற்கு தமிழக அரசின் அமரர் ஊர்தி வராததால் திருவள்ளூர் காவல் ஆய்வாளர் ரவிக்குமார் தலைமையில் வந்த காவல்துறையினர், அந்த வழியாக வந்த குட்டி யானை லாரியை மடக்கி இருவரின் சடலத்தையும் வண்டியில் ஏற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.

500 மீட்டர் இடைவெளியில் தலைமை அரசு மற்றும் அரசு தலைமை மருத்துவமனையில் இருந்தும் உயிரிழந்த இருவரின் சடலத்தை மீட்க வாகனம் வராததால் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆத்திரமடைந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

banner

Related Stories

Related Stories