தமிழ்நாடு

மோடி வருகைக்காக பேருந்து சேவையை குறைத்த அதிமுக அரசு.. நீண்ட நேரம் காத்திருக்கும் மக்கள்!

பிரதமர் மோடியின் சென்னை வருகையையொட்டி பேருந்து சேவை போதிய அளவு இல்லாததால் மக்கள் அதிக நேரம் பேருந்து நிலையத்தில் காத்திருப்பு

மோடி வருகைக்காக பேருந்து சேவையை குறைத்த அதிமுக அரசு.. நீண்ட நேரம் காத்திருக்கும் மக்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பிரதமர் மோடி இன்று பல்வேறு புதிய திட்டங்களை தொடங்கி வைக்கவும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் சென்னை வருகிறார்.

இதற்காக காலை 8 மணி முதல் நண்பகல் ஒரு மணி வரை சென்னையில் போக்குவரத்து மாற்றம், பேருந்து சேவை மாற்றப்பட்டுள்ளன. வழக்கம் போல் இயங்கும் பேருந்துகளில் இருந்து பேருந்துகள் பாதியாக குறைக்கப்பட்டுள்ளதாகவும், தி.நகர் டிப்போவில் இருந்து கண்ணகி நகர், ஆவடி போன்ற வழித்தடங்களில் நீண்ட நேரமாக காத்திருந்தும் பேருந்துகள் இல்லை என மக்கள் கூறுகின்றனர்.

அரசு போக்குவரத்து மாற்றத்தை அறிவித்தது போல், பேருந்து குறைவு மற்றும் வழித்தடத்தையும் அறிவித்திருந்தால் தங்களுக்கு தெரிந்திருக்கும் எனவும், விடுமுறை தினமான இன்று பேருந்து இல்லாத சூழலை எதிர்பார்க்கவில்லை என்றும் கூறுகின்றனர். பேருந்துகள் இருந்தும், ஓட்டுநர், நடத்துனர் இருந்தும் பேருந்தை இயக்கவில்லை என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

banner

Related Stories

Related Stories