தமிழ்நாடு

"இனி 'மை லார்ட்' வேண்டாம்; ‘சார்’ போதும்" : வழக்கறிஞர்களுக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வேண்டுகோள்!

வழக்கறிஞர்கள் இனி 'சார்' என்று அழைத்தாலே போதுமானது என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.

"இனி 'மை லார்ட்' வேண்டாம்; ‘சார்’ போதும்" : வழக்கறிஞர்களுக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வேண்டுகோள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

விருதுநகர் மாவட்டம், திருச்சுழியில் நீதித்துறை நடுவர் நீதிமன்ற திறப்புவிழா நேற்று நடைபெற்றது. சென்னையில் இருந்து தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி காணொலி மூலம் நீதிமன்றத்தை திறந்து வைத்தார்.

பின்னர் அவர் பேசும்போது, “காலனித்துவ மற்றும் நிலப்புரபுத்துவ முறையை குறிக்கும் மை லார்ட், லார்ட்ஷிப் என நீதிபதிகளை அழைக்கும் முறைகளை வழக்கறிஞர்கள் கைவிடவேண்டும். இனி மரியாதை நிமித்தமாக நீதிபதிகளை 'சார்' என்று அழைத்தாலே போதுமானது.

நாட்டின் தற்போதைய வளர்ச்சிக்காக, விவசாய நிலங்களை அழிக்கக் கூடாது. அப்படிச் செய்வது, மக்களின் உணவை பறிக்கும் செயலாகும். நிலம் மற்றும் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் குறித்து ஏராளமான பொது நல வழக்குகள் வருகிறது. நிலம் ஒரு பற்றாக்குறையான பொருளாக மாறிவருகிறது.

"இனி 'மை லார்ட்' வேண்டாம்; ‘சார்’ போதும்" : வழக்கறிஞர்களுக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வேண்டுகோள்!

ஏராளமான காடுகள் அழிக்கப்பட்டுள்ளன. சமீபகாலங்களில் வளர்ச்சிக்காக எடுக்கப்பட்ட வன நிலங்களை திரும்ப ஒப்படைத்து, வன வழித்தடங்களை மீண்டும் உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories