தமிழ்நாடு

“சாத்தான்குளம் சம்பவத்திற்குப் பிறகும் திருந்தாத காவல்துறை” : தலித் இளைஞரை அடித்து உதைத்த மதுரை போலிஸ்!

மதுரையில் தலித் சமூகத்தைச் சேர்த்த இளைஞர் ஒருவரை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலிஸார் கொடூரமாக தாக்கியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“சாத்தான்குளம் சம்பவத்திற்குப் பிறகும் திருந்தாத காவல்துறை” : தலித் இளைஞரை அடித்து உதைத்த மதுரை போலிஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

அ.தி.மு.க ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளைக் கைகட்டி வேடிக்கை பார்க்கும் தமிழக காவல்துறை, மக்களிடையே தனது அதிகாரத்தைக் காட்டி அராஜகத்தில் ஈடுபட்டு வருகிறது.

குறிப்பாக, கடந்த காலங்களில் சாத்தான்குளத்தைத் போல பல மோசமான சம்பவங்களை அடுத்தடுத்து செய்து வந்துள்ளது. இதற்காக அவ்வப்போது பலரும் தங்களின் கண்டனங்களை தெரிவித்து வந்தாலும் காவல்துறை தனது போக்கை மாற்றிக்கொள்வதில்லை.

அந்தவகையில் தற்போது மதுரையில் தலித் சமூகத்தைச் சேர்த்த இளைஞர் ஒருவரை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலிஸார் ஒருவர் தாக்கியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“சாத்தான்குளம் சம்பவத்திற்குப் பிறகும் திருந்தாத காவல்துறை” : தலித் இளைஞரை அடித்து உதைத்த மதுரை போலிஸ்!

மதுரை மாவட்டம் சுப்பிரமணியபுரம் ஹரிஜன காலனி பகுதியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவர் தனது உறவினருடன் செல்லும்போது, அவரின் காரை வழிமறித்த ஜெய்ஹிந்த்புரம் போலிஸார் அவரை தாக்கியதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இதனையடுத்து மதுரை காவல்துறை ஆணையாளரிடம் திருப்பதி புகார் ஒன்றை அளித்துள்ளார். இதுகுறித்து திருப்பதி அளித்த புகாரில், “நான் எனது மனைவி தமிழ்ச்செல்வி, மகள் வெண்பா, மகன் துருவன் ஆகியோருடன் வசித்து வருகிறேன். நான் பட்டியல் சாதியான இந்து அருந்ததியர் பிரிவைச் சார்ந்தவன். எனக்கு உடன் பிறந்த ஒரு அண்ணனும் ஒரு அக்காவும் இருக்கிறார்கள்.

நான் பத்தாம் வகுப்புவரை படித்து விட்டு மதுரை இராஜாஜி அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பு பணியாளராக பணி செய்து குடும்ப ஜீவனம் செய்து வருகிறேன். இந்நிலையில் கடந்த 08.02.2021 அன்று திங்கட்கிழமை நானும் எனது சித்தப்பா மகன் அண்ணன் காளீஸ்வரன், எனது நண்பர்கள் இசக்கி, பழனி, ஆகியோருடன் பாண்டி கோயிலில் நிகழ்ந்த எனது உறவினர் வீட்டு காதணி விழாவிற்குச் சென்று விட்டு மாலை சுமார் 4 மணியளவில் காரில் வீட்டிற்கு வந்துக் கொண்டிருந்தோம்.

“சாத்தான்குளம் சம்பவத்திற்குப் பிறகும் திருந்தாத காவல்துறை” : தலித் இளைஞரை அடித்து உதைத்த மதுரை போலிஸ்!

நாங்கள் மதுரை சுப்பிரமணியபுரம் குருகுலம் பள்ளியருகில் வந்து கொண்டிருந்த போது நாங்கள் வந்த காரை எனக்கு ஏற்கனவே அடையாளம் தெரிந்த ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலைய போலிஸார் நான்கு பேர் மறித்தார்கள். அவர்களில் இருவர் காவல் சீருடை அணிந்தும் இருவர் காவல் சீருடை அல்லாத சாதாரண உடையிலும் இருந்தனர்.

அந்த போலிஸாரில் ஒருவர், எங்களை பார்த்து “நீங்க எங்கடா போய்ட்டு வாரீங்க” என்று கேட்டார். நான் உறவினர் வீட்டில் காதனி விழாவிற்கு சென்று வந்து கொண்டிருக்கிறோம் என்றேன். அதற்கு காவலர் நீங்க எல்லாரும் காவல் நிலையத்திற்கு வாங்கடா உங்களை அங்க கொண்டு போய்தான் விசாரிக்கனும் என்றார்.

அப்போது சார் நான் தவறு ஏதும் செய்யவில்லையே ஏன் காவல் நிலையத்திற்கு அழைக்கிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர்கள் ஒவ்வொருவரும் நீங்க யாருன்னு எங்களுக்கு தெரியும்டா ஒழுங்கு மரியாதையா காவல் நிலையத்திற்கு காரோடு வாங்க இல்லைன்னா நடக்கிறதே வேறு என்று மிரட்டி எங்களை காரோடு அவர்கள் வந்த மோட்டார் சைக்கிள்களோடும் ஜெய்ஹிந்துபுரம் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து அங்கிருந்த சார்பு ஆய்வாளர் செல்வக்குமாரிடம் ஏதோ பேசினார்கள்.

“சாத்தான்குளம் சம்பவத்திற்குப் பிறகும் திருந்தாத காவல்துறை” : தலித் இளைஞரை அடித்து உதைத்த மதுரை போலிஸ்!

சார்பு ஆய்வாளர் செல்வக்குமார் என்னை பார்த்து உனக்கு எந்த ஏரியாடா என்று கேட்டார். ஐயா எங்க வீடு சுப்பிரமணியபுரம் காலனியில் இருக்கிறது என்றேன். நீங்கள் எல்லாம் காலனி பசங்களாடா உங்களைத்தான் எதிர்பார்த்து இருந்தேன் என நக்கலாக சிரித்தார். நான் காலனி என்றால் நக்கலா சார் என கேட்டேன். அதற்கு சார்பு ஆய்வாளர் செல்வகுமார், “காலனியில் குடியிருக்கிற நாய் என்னை எதிர்த்து சரிசமமா பேசலாமாடா” என ஆபாசமாக பேசிக்கொண்டு என்னை அவரது வலது கையால் இரு செவிகளிலும் மாறி மாறி அடித்தார்.

கையால் முகத்தில் குத்தினார். எனது பேன்ட் சட்டையை அவிழ்க்க வைத்து நிர்வாணப்படுத்தி அடித்தார். அவர் அணிந்திருந்த பூட்ஸ் காலால் எட்டி உதைத்து கீழே தள்ளினார். அவரோடு இருந்த மற்ற காவலர்களும் கையில் வைத்திருந்த லத்தியால் எனனை மாறி மாறி அடித்து துன்புறுத்தினார்கள். கீழே கிடந்த என்னை மீண்டும் “காலனிக்கார நாயே.. வாய் பேசுவியா போலிஸை எதிர்த்து கேள்வி கேட்பியா?” என்று சொல்லிக் கொண்டே அங்கிருந்த லத்தியால் எனது கால், கை, பிட்டம், முதுகு பகுதிகளில் மாறி மாறி அடித்தார்.

வேதனையில் கதறி அழுத என்னை மறுபடியும் பூட்ஸ் காலால் எனது முகத்தில் மிதித்தார். எனது காது, மூக்கு வாயில் இருந்து இரத்தம் கசிந்து வடிந்தது. வேதனையில் துடித்தேன். அப்போது என்னுடன் வந்த மூன்று நபர்களில் இரண்டு பேர் பழனிக்குமார் மற்றும் இசக்கி என்பவரையும் கன்னத்தில் அறைந்து வீட்டிற்கு போங்கடா என்று துரத்திவிட்டார்.

“சாத்தான்குளம் சம்பவத்திற்குப் பிறகும் திருந்தாத காவல்துறை” : தலித் இளைஞரை அடித்து உதைத்த மதுரை போலிஸ்!

பிறகு எனது சித்தப்பா மகன் காளீஸ்வரனையும் அடித்து உட்கார வைத்தார். பின்னர் என் மீதும் என் அண்ணன் காளீஸ்வரன் மீதும் 75 பிரிவில் வழக்கு போட்டு இனிமேல் இங்கு நடந்ததை யாரிடமும் சொல்லக் கூடாது என்று கூறினார். எனது பாக்கெட்டில் இருந்த ரூ. 500 பணத்தை எடுத்துக் கொண்டார்கள். என்னிடம் ஒரு வெள்ளைத்தாளில் கையொப்பம் பெற்றுக் கொண்டார்கள். வெளியே துரத்தப்பட்டவர்கள் மூலம் தகவல் அறிந்த எனது பெரியப்பா மகன் வளவன்ராஜ் என்பவர் ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையத்திற்கு வந்து போலிஸாரோடு பேசி என்னை வீட்டிற்கு அழைத்து வந்தார்.

வீட்டிற்கு வந்த எனது வாயில் இருந்தும் மூக்கில் இருந்தும் இரத்தம் கசிந்தது. அதனால் எனது மனைவி தமிழ்ச்செல்வி, அக்கா வளர்மதி, உட்பட உறவினர்கள் என்னை விசாரித்து சம்பவத்தினை அறிந்து கொண்டு, மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் உள்நோயாளியாக இரவு சுமார் 11.38மணிக்கு சிகிச்சைக்கு சேர்த்தனர். மருத்துவர்கள் சம்பவத்தினை கேட்டு விபத்து பதிவு செய்து போலிஸாருக்கு தகவல் அளித்தனர்.

போலிஸார் 08.02.2021 தேதி இரவு அதாவது 09.02.2021 காலை 3.00 மணி அளவில் என்னிடம் வாக்குமூலம் வாங்கி சென்றவர்கள் மனு ரசீது எண். 90 /2021 Date; 09.02.2021 மட்டும் தந்தார்கள். சம்பந்தப்பட்ட போலிஸார் மீது எவ்விதமான வழக்கும் பதிவு செய்து மேல் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. மருத்துவர்கள் எனக்கு எக்ஸ்ரே மற்றும் ஸ்கேன் எடுத்து பரிசோதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். மேலும் மருத்துவர்கள் எனது தாடையில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பதாக தெரிவித்தார்கள்.

“சாத்தான்குளம் சம்பவத்திற்குப் பிறகும் திருந்தாத காவல்துறை” : தலித் இளைஞரை அடித்து உதைத்த மதுரை போலிஸ்!

மேற்படி சம்பவம் என்னுடன் காரில் வந்த காளீஸ்வரன், பழனி, இசக்கி, உட்பட உறவினர்களுக்கு நன்கு தெரியும், மேலும் சார்பு ஆய்வாளர் செல்வக்குமார் தலைமையிலான போலிஸார் என்னை சட்ட விரோதமாக கைது செய்து காவலில் வைத்து துன்புறுத்திய கொடுமையை அந்த காவல் நிலையத்தில் உள்ள சி.சி.டி.வி. கேமராவை சோத்தித்தால் உண்மைகள் தெரியவரும்.

எனவே நிரபராதியான என்னை சட்ட விரோதமாக கைது செய்து காவலில் வைத்து நிர்வாணப்படுத்தி, லத்தி மற்றும் பூட்ஸ் காலால் மிதித்து, அடித்து சித்ரவதை செய்த சார்பு ஆய்வாளர் செல்வக்குமார் தலமையிலான நேரில் அடையாளம் தெரிந்த நான்கு போலிசார் மீதும் சட்டப் பூர்வமாக வழக்கு பதிவு செய்து மேல்நடவடிக்கை மேற்கொண்டு பாதிக்கப்பட்ட எனக்கு நீதி நிவாரணம் பெற்றுத் தருமாறு வேண்டுகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories