தமிழ்நாடு

புயல் பாதிப்புகள்: “மாநில அரசுதான் முக்கிய பொறுப்பாளி” - கைவிரித்த மத்திய மோடி அரசு!

தமிழகத்தில் அண்மையில் வீசிய புயல்களால் ஏற்பட்ட பாதிப்புகள் எவ்வளவு என்றும் அதற்காக ஒதுக்கப்பட்ட நிதி பற்றியும் அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசை வலியுறுத்தி திமுக mp சி.என்.அண்ணாதுரை வலியுறுத்தினார்.

புயல் பாதிப்புகள்: “மாநில அரசுதான் முக்கிய பொறுப்பாளி” - கைவிரித்த மத்திய மோடி அரசு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நிவர் மற்றும் புரவி புயல்களால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் அதற்காக ஒதுக்கப்பட்ட நிதிகள் குறித்து மக்களவை தி.மு.க. உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை கேள்வி எழுப்பியுள்ளார்.

அதில், தமிழகத்தில் அண்மையில் வீசிய நிவர் மற்றும் புரவி புயல்களால் அதிக அளவில் விவசாயிகளுக்கு பெருமளவில் சேதம் ஏற்பட்டுள்ளதா? அவ்வாறு சேதம் ஏற்பட்டிருந்தால் அது குறித்து விரிவான விளக்கம் தெரிவிக்கக் கேட்டுக்கொள்கிறேன். இந்த இரு புயல்களின் சேதம் குறித்து பார்வையிடச் சென்ற மத்தியக் குழுவினர், அது குறித்து அறிக்கை ஏதாவது அளித்துள்ளதா? பயிர் இழப்பிற்காக விவசாயிகளுக்குத் தர வேண்டிய நிதி குறித்து ஏதாவது பரிந்துரை செய்துள்ளதா? அவ்வாறு எனில் அது தொடர்பான ஒதுக்கீடு குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுகிறேன்.

மாநிலங்களில் அவ்வப்போது ஏற்படும் கடும் மழை வெள்ளம் மற்றும் புயல் சேதங்களைத் தடுக்கவும் கட்டுப்படுத்தவும் உறுதியான முயற்சிகள் மேற்கொண்டு நிரந்தர தீர்வுக்கு அரசு ஏற்பாடு செய்துள்ளதா? நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் அதை தடுக்கவும், ஒவ்வொரு ஆண்டும் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு நிதி ஆதாரம் மூலம் அவர்களின் நஷ்டத்தை தணிக்க நடவடிக்கை ஏதேனும் எடுக்கப்பட்டுள்ளதா? அவ்வாறெனில் அது குறித்து விளக்க அறிக்கை தாக்கல் செய்யவேண்டும்; இல்லாவிடில் அதற்கான காரணத்தை தெரிவிக்கவேண்டும். இது தவிர பயிர்ச் சேதாரங்களை தடுக்க அல்லது சரி செய்ய மேற்கொண்ட அல்லது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் பற்றி அரசு தெரிவிக்க வேண்டும்.” இவ்வாறு தி.மு.க. உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை கேள்வி எழுப்பினார்.

அதற்கு மத்திய வேளாண் அமைச்சர் தோமர் அளித்த பதில்கள் பின்வருமாறு:-

“தமிழக அரசின் இது தொடர்பான கோரிக்கை மனு கிடைக்கப் பெற்றவுடன் மத்திய உள்துறை அமைச்சகம் அதிகாரிகள் கொண்ட குழுக்கள் அமைத்து அந்தக் குழுக்கள் நிவர் மற்றும் புரவி புயல்களால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு கடந்த ஆண்டு டிசம்பர் 5 முதல் 8ம் தேதி வரையிலும், 28 முதல் 30 ஆம் தேதி வரையிலும் சென்று சேத விவரங்களை சேகரித்துள்ளது. பின்னர் அக்குழுக்களின் சேத விவரங்கள் அடங்கிய அறிக்கைகளை, உயர்மட்டக் குழுவிடம் தேசிய செயற்குழுவின் துணை கமிட்டியிடமும் நடைமுறையின்படி பரிசீலிக்க அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மாநில அரசுகளின் பேரிடர் மேலாண்மைதான் இவைகளுக்கு முக்கிய பொறுப்பாளியாகும். இது குறித்து மாநில அரசுகள் தான் முதன் முதலாக சேதாரம் கணக்கிட்டு நிதியுதவி குறித்து முடிவெடுக்க வேண்டும். கூடுதல் நிதியுதவியைத்தான் தேசிய பேரிடர் பொறுப்பு நிதியத்தின் மூலம் வழங்க நவடிக்கை எடுக்கும். ஏற்கனவே தமிழக அரசிடம் புயல்களினால் பாதிக்கப்பட்ட வேளாண் பயிர்கள் உள்ளிட்டவைகளுக்கு வழங்குவதற்கு என ரூ.1,360 கோடி உள்ளது. மத்திய, மாநில அரசுகளின் அளவில் ஏற்கனவே இயற்கை பேரிடர் மேலாண்மை அமைப்புகள் உள்ளன. அவைகள் எவ்வித இயற்கை பாதிப்புகளையும் முறையாக கண்காணிக்கக் கூடியவைகளாகும்.” என மத்திய அமைச்சர் தோமர் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories