தமிழ்நாடு

உயர்மின் கோபுரம் திட்டத்துக்கு எதிராக காத்திருப்பு போராட்டம்: மொட்டையடித்து போராடிய திருப்பூர் விவசாயிகள்

விளை நிலங்களில் உயர்மின் கோபுரம் அமைப்பதை கைவிடக்கோரி 11வது நாளாக நடைபெற்று வரும் காத்திருப்பு போராட்டத்தில் விவசாயிகள் மொட்டை அடித்து போராட்டம்.

உயர்மின் கோபுரம் திட்டத்துக்கு எதிராக காத்திருப்பு போராட்டம்: மொட்டையடித்து போராடிய திருப்பூர் விவசாயிகள்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

விளை நிலங்கள் வழியாக புதிதாக உயர்மின் கோபுரம் அமைக்கப்படுவதை கைவிடக்கோரி திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே படியூரில் விவசாயிகள் 11 வது நாளாக இன்றும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இன்று மொட்டை அடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்திய தந்தி சட்டத்தை நீக்க வேண்டும், விவசாய நிலங்கள் வழியாக அமைக்கப்படவுள்ள விருதுநகர் முதல் காவுத்தம்பாளையம் வரையிலான 765 கிலோ வாட் உயர் மின் கோபுர திட்டத்தை முழுமையாக நிறுத்த வேண்டும்,அனைத்து உயர்மின் கோபுர திட்டங்களும் சாலையோரமாக கேபிள் மூலம் அமைக்க வேண்டும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மாத வாடகை அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்

உயர்மின் கோபுரம் திட்டத்துக்கு எதிராக காத்திருப்பு போராட்டம்: மொட்டையடித்து போராடிய திருப்பூர் விவசாயிகள்

கடந்த 10 நாட்களாக படியூரில் நடைபெற்று வரும் விவசாயிகளின் தொடர் காத்திருப்பு போராட்டத்தின் போது, அரைநிர்வாண போராட்டம், கஞ்சி தொட்டி திறப்பு, ரத்தத்தால் உயர் மின் கோபுரம் வேண்டாம் என்று எழுதியது, தங்களது நிலத்துக்கான பட்டா நகலை தீயிட்டுக் கொளுத்தியது, கால்நடைகளுடன் போராட்டம் நடத்தியது ,கண்களை கருப்பு துணியால் கட்டிக்கொண்டு போராட்டம் நடத்தியது, தென்னங்கன்றுகளுக்கு பூஜை செய்து நூதன போராட்டம் செய்தது, மணி அடித்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்துவது, உள்ளிட்ட பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர்.

அதன் தொடர்ச்சியாக இன்று 11-ம் நாள் போராட்டத்தின் போது அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மொட்டையடித்து நூதன போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டு முழக்கங்களை எழுப்பினர்.

banner

Related Stories

Related Stories