தமிழ்நாடு

அச்சுறுத்தும் காலநிலை மாற்றம்... நீலகிரிக்கு தாமதமாக விசிட் அடிக்கும் அரிய வகை பறவைகள்!

நீலகிரியில் காலநிலை மாற்றத்தால் வலசைக்கு செல்ல தாமதமான பறவைகள் பற்றிய சிறப்பு தொகுப்பு!

அச்சுறுத்தும் காலநிலை மாற்றம்... நீலகிரிக்கு தாமதமாக விசிட் அடிக்கும் அரிய வகை பறவைகள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

உயிர்ச்சூழல் மண்டலமாக உள்ள நீலகிரி மாவட்டத்தில் தற்போது பறவைகளின் உள்ளூர் வலசை பயணம் ஒரு மாதம் தாமதமாக தற்போது துவங்கியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் நிகழும் கால நிலை காரணமாகவும் 55 சதவீதம் வனப்பகுதிகள் நிறைந்துள்ளதாலும் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பறவைகள் நீலகிரிக்கு வந்து செல்வது வாடிக்கையான ஒன்று.

இந்த காலகட்டத்தில் உள்ளூர் வலசையில் பறவைகள், மலைப் பகுதியிலிருந்து சமவெளிப் பகுதிகளிலும், ஒரு மலைப்பகுதியில் இருந்து மற்றொரு மலை பகுதிகளுக்கும் இடம்பெயர்வது வழக்கம். இந்த ஆண்டு வலசைப்பாதை பயணம் சற்று தாமதமாக துவங்கியுள்ளது.

தொடர்மழை மற்றும் உறைபனி பொழிவு குறைவு ஆகியவை இந்த உள்ளுர் வலசை பாதையை துவங்க காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த வலசைப் பாதையில் உதகை, காடநாடு, குன்னூர், பர்லியார், கோத்தகிரி ஆகிய பகுதியில் இருந்து துவங்கும்.

அச்சுறுத்தும் காலநிலை மாற்றம்... நீலகிரிக்கு தாமதமாக விசிட் அடிக்கும் அரிய வகை பறவைகள்!
bull

குறிப்பாக, கிங்பிஷர் நீலகிரி லாபிங்திரஸ், ஆரஞ்சு பிளாக், பிளைகேச்கர், ஒயிட் ஐ, நீலகிரி பிளை கேப்சர், பிளாக் டிராங்கோ, கிரோ வேக்டைல், செவன் சிஸ்டர்ஸ், லாபிங் திரஸ், பபுள் பின்ச், ஒரண்டல் ஒயிட் அய், கிரீக் கேனரி, பிளை கேச்சர் , ஆகிய பறவைகள் தற்போது வலசை பாதையைத் துவங்கியுள்ளன. இந்த வலசைப் பாதையில் செல்லும் பறவைகள் நீலகிரியின் பல்வேறு இடங்களில் எளிதாகக் காண முடிகிறது.

குறிப்பாக குன்னூர் சிம்ஸ் பூங்கா, கொடநாடு காட்சி முனை பர்லியார், குன்னூர், கூடலூர் ஊசிமலை காட்சிமுனை ஆகிய பகுதியில் இருந்து இடம்பெயர்கின்றது. ஒன்பது மாத கொராேனா காலகட்டத்தில் பொதுமக்கள் கூட்டம் இன்றி சுற்றுலா தலங்கள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டது. அந்த சமயங்களில் இந்தப் பறவைகள் அனைத்தும் அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் எளிதாக காண முடிகிறது.

இப்போது சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவதால் பூங்காக்கள் மற்றும் சுற்றுலாத்தலங்களில் இருந்து தங்களின் இயல்பான வலசைப் பாதைக்கு இவை திரும்ப துவங்கியுள்ளது. மேலும் தொடர் மழை காரணமாகவும், இந்த ஆண்டு பனிப்பொழிவு குறைவு என்பதாலும் இந்த வலசைப்பாதை தாமதமாக தொடங்கியுள்ளது.

banner

Related Stories

Related Stories