தமிழ்நாடு

உலக பறவைகள் தினம் : “மேற்கு தொடர்ச்சி மலையில் வேகமாக அழிந்து வரும் அரிய வகை பறவைகள்” - அதிர்ச்சித் தகவல்!

காடுகளின் பாதுகாவலனாக திகழும் பறவைகள் குறித்த சிறப்புச் செய்தி..

உலக பறவைகள் தினம் : “மேற்கு தொடர்ச்சி மலையில் வேகமாக அழிந்து வரும் அரிய வகை பறவைகள்” - அதிர்ச்சித் தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மேற்கு தொடர்ச்சி மலையில் வாழும் அரிய வகை பறவைகள் வேகமாக அழிந்து வருவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. உலகில் அதிகமான மரங்களை விதைத்தது பறவைகள் என்றால் அது மிகையாகாது. உணவு உற்பத்தி, சுற்றுச்சூழல், காலநிலை போன்றவை பாதுகாப்பதும் பறவைகள்தான்.

விளைநிலங்களில் உற்பத்தியாகும் பூச்சிகளை சாப்பிட்டு, விவசாயிகளின் பாதுகாவலனாக திகழும் பறவைகள் பொதுவாக நீர் நிலைகளை சார்ந்து வாழக்கூடியவை. காடுகளில் உள்ள மரங்களில் இருக்கும் பழங்களை சாப்பிட்டு, ஒரு வனப்பகுதியில் இருந்து நீண்ட தூரம் பயணித்து பிற வனப்பகுதிக்கு இடம்பெயர்ந்து செல்லும் பறவைகள் எச்சத்தில் இருந்து வெளியேறும் விதைகள் மூலம் அந்த பூமியில் விதைகள் விதைக்கப்பட்டு மரங்கள் வளர்ந்து வருகிறது.

உலக பறவைகள் தினம் : “மேற்கு தொடர்ச்சி மலையில் வேகமாக அழிந்து வரும் அரிய வகை பறவைகள்” - அதிர்ச்சித் தகவல்!
kingfisher

இந்நிலையில், நாடு முழுவதும் விளைநிலங்களில் அதிக அளவு பூச்சிக்கொல்லி மருந்து அடித்து வருவதாலும் காலநிலை மாற்றம் காரணமாக பலவகையான பறவைகள் வெளிநாடுகளிலிருந்து இந்தியா வருவதை சுமார் 70 சதவீதம் குறைத்துக் கொண்ட நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலைகளில் வாழும் நூற்றுக்கணக்கான அரிய வகை பறவை இனங்கள் அழிவின் விழிம்பில் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

பொதுவாக பசுமை நிறைந்த நீலகிரி மாவட்டத்தில் Sternidae, sandpiper, falcon, shrike, tit, bank myna, hornbill, bank myna, heron, plover, kingfisher, cuckoos உட்பட 300-க்கும் மேற்பட்ட வகையான அரிய வகையில் , பல நூறு வண்ணங்களில் சிறிய அளவு முதல் பெரிய அளவு வரை பறவைகள் வாழ்ந்து வருகிறது.

உலக பறவைகள் தினம் : “மேற்கு தொடர்ச்சி மலையில் வேகமாக அழிந்து வரும் அரிய வகை பறவைகள்” - அதிர்ச்சித் தகவல்!
plover

நீலகிரியை பொருத்தவரை, சதுப்பு நில காடுகளில், நகர்ப்பகுதிகளில் வாழ்ந்து வந்த சில பறவை இனங்கள் காங்கிரட் கட்டிடங்களால் கூடுகள் கட்ட முடியாத நிலையிலும், சதுப்பு நிலங்களை அழித்ததால், சில வகையான பறவைகள் அழிந்துள்ளது.

ஆண்டுதோறும் நீலகிரி மாவட்டத்தின் காலநிலையை அனுபவிக்க வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வெப்பம் மற்றும் குளிர் காலம் என இரு பருவங்களில் 40 வகையான பறவைகள் நீலகிரிக்கு வருவது வழக்கம்.

உலக பறவைகள் தினம் : “மேற்கு தொடர்ச்சி மலையில் வேகமாக அழிந்து வரும் அரிய வகை பறவைகள்” - அதிர்ச்சித் தகவல்!
hornbill

இவ்வாறு வரும் பறவைகள் நீலகிரியில் நிலவும் இதமான காலநிலையில் இனப்பெருக்கம் செய்து, கூடுகட்டி குஞ்சுகள் பொறித்து மீண்டும் தாய் நாட்டிற்கு செல்லும். அவ்வாறு ஆண்டுதோறும் கேத்தி பள்ளத்தாக்கிற்கு வரக்கூடிய செம்போத்தி என்று பறவையினம் வந்து செல்லும் நிலையில், கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக நீலகிரிக்கு வருவதில்லை என பறவை ஆராய்ச்சியாளர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

மேலும், நீலகிரியை தாயகமாகக் கொண்டு வாழும் Hornbill என அழைக்கப்படும் இருவாட்சி, கிங்ஃபிஷர் , myna, bull போன்ற நூற்றுக்கணக்கான பறவைகள் விளைநிலங்களில் அதிக அளவு பயன்படுத்தும் பூச்சிக்கொல்லி மருந்துகளாலும், காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு வெப்பம் அதிகரித்தல், வரலாறு காணாத மழை, காட்டுத்தீ, காங்கிரட் கட்டிடங்கள் போன்ற பல்வேறு இடையூறுகளால் அழிவின் விழிம்பில் சிக்கித் தவிப்பது தற்போது தெரியவந்துள்ளது.

உலக பறவைகள் தினம் : “மேற்கு தொடர்ச்சி மலையில் வேகமாக அழிந்து வரும் அரிய வகை பறவைகள்” - அதிர்ச்சித் தகவல்!
bull

ஒருநாடு வளமிக்க நாடாக இருக்க அந்த நாட்டின் வனப்பகுதி வளம் மிக்கதாக இருக்க வேண்டும் , அதற்கு பறவைகள் வளமுடன் வாழ வேண்டும். எனவே நீலகிரியில் உள்ள மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரில் வாழும் நூற்றுக்கணக்கான பறவை இனங்களைப் பாதுகாக்க மத்திய - மாநில அரசுகள் ஒன்றிணைந்து ஐக்கிய நாடுகள் சபையிடும் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், பறவை இனங்களை பாதுகாக்கவும் கூடுதலாக நிதி பெற்று வளமிக்க காடுகளையும் அதில் வாழும் பறவைகளையும் காத்திட அரசுகள் முன்வர வேண்டுமென்று பறவைகளைப் பாதுகாக்க அவசரம் அவசியம் கருதி நடவடிக்கை எடுக்க வேண்டுமென பறவை ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories