தமிழ்நாடு

“நீதிபதிகள் நியமனத்தில் இனி சமூக நீதி காக்கப்படும்”: தி.மு.க எம்.பி கடிதத்திற்கு மத்திய அமைச்சகம் பதில் !

“நீதிபதிகள் நியமனத்தில் இனி சமூக நீதி காக்கப்படும்” என தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் வில்சன் அவர்களுக்கு மத்திய சட்டத்துறை அமைச்சகம் பதில் கடிதம் எழுதியுள்ளது.

“நீதிபதிகள் நியமனத்தில் இனி சமூக நீதி காக்கப்படும்”: தி.மு.க எம்.பி கடிதத்திற்கு மத்திய அமைச்சகம் பதில் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உச்சநீதிமன்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனங்களில் சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர், பெண்கள் ஆகியோருக்கு முக்கியத்துவம் அளிக்காமல் இருப்பதாகவும், எனவே இது குறித்து உரிய கவனம் செலுத்த வேண்டும் என மத்திய சட்டத் துறை அமைச்சகத்திற்கு அறிவுரை வழங்குமாறு தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் வில்சன் சார்பில் குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதப்பட்டிருந்தது.

இந்த கோரிக்கை குறித்து பரிசீலிக்குமாறு குடியரசுத் தலைவர் மத்திய சட்டத் துறை அமைச்சகத்திற்கு அறிவித்தல் வழங்க இருந்த நிலையில், சட்டத்துறை அமைச்சகம் அதற்கு பதில் கடிதம் எழுதியுள்ளது.

அதில், இந்திய அரசியல் அமைப்பை பொறுத்தவரை நீதிபதிகள் நியமனத்தில் இட ஒதுக்கீடு முறை பின்பற்ற முடியாது என தெளிவுபடுத்தி உள்ள சட்டத்துறை அமைச்சகம், இருப்பினும் நீதிபதிகள் நியமனத்தில் பன்முகத்தன்மை பேணப்படும் என சுட்டிக்காட்டியுள்ளது.

“நீதிபதிகள் நியமனத்தில் இனி சமூக நீதி காக்கப்படும்”: தி.மு.க எம்.பி கடிதத்திற்கு மத்திய அமைச்சகம் பதில் !

நீதிபதிகள் நியமனம் தொடர்பான பரிந்துரைகளை அனுப்பும் பொழுது ,இதர பிற்படுத்தப்பட்டவர்கள்,சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர், பெண்கள் ஆகியோருக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது

banner

Related Stories

Related Stories