தமிழ்நாடு

“அதிமுக அரசின் கடந்த 10 ஆண்டுகளில் ஊழல் செய்யாத துறைகளே இல்லை; அனைத்திலும் ஊழல் மயம் தான்”: பொன்முடி MLA!

“அ.தி.மு.க அரசின் கடந்த 10 ஆண்டுகளாக அனைத்து துறையிலும் ஊழல் நடைபெற்றுள்ளது” என தி.மு.க துணை பொதுச் செயலாளர் பொன்முடி குற்றம் சாட்டியுள்ளார்.

“அதிமுக அரசின் கடந்த 10 ஆண்டுகளில் ஊழல் செய்யாத துறைகளே இல்லை; அனைத்திலும் ஊழல் மயம் தான்”: பொன்முடி MLA!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
premjourn
Updated on

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் அதிமுக அரசை நிராகரிக்கிறோம் என்று மக்கள் கிராமசபை கூட்டம் நடைபெற்று வருகிறது.

திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கூடலூர் ஊராட்சியில் மக்கள் கிராம சபை கூட்டம் ஒன்றிய கழக செயலாளர் ரவிச்சந்திரன் ஏற்பாட்டில் நடைபெற்றது. கூட்டத்தில் கழக துணை பொதுச் செயலாளரும், தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான பொன்முடி கலந்துகொண்டு கிராம மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

அப்போது பேசிய அவர், அ.தி.மு.க ஆட்சியில், கடந்த 10 ஆண்டுகளில் ஊழல்கள் நடைபெறாத துறைகளே இல்லை. அனைத்து துறைகளிலும் ஊழல் நடைபெற்றுள்ளது. ஒரே மாதத்தில் பல கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட தடுப்பணை உடைந்தது அ.தி.மு.க அரசின் ஊழலுக்கு எடுத்துக்காட்டாகும்.

இந்த ஆட்சி முழுவதும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுவதுபோல, கமிஷன், கலெக்சன், கரப்ஷனில் மட்டுமே நடைபெற்று வருகிறது. இன்னும் மூன்று மாதம் கழித்து திமுக ஆட்சிக்கு வரும்போது கிராமங்களில் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும் என பேசினார்.

banner

Related Stories

Related Stories