தமிழ்நாடு

“நலத்திட்ட உதவிகள் முறையாக கிடைக்க வேண்டுமானால் தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும்” : பொன்முடி MLA!

“இன்னும் நான்கு மாத காலத்திற்கு பிறகு தமிழகத்தை ஆளப்போவது தி.மு.கதான்” என தி.மு.க துணை பொதுச் செயலாளர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

“நலத்திட்ட உதவிகள் முறையாக கிடைக்க வேண்டுமானால் தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும்” : பொன்முடி MLA!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
premjourn
Updated on

விழுப்புரம் மத்திய மாவட்டம் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் அ.தி.மு.கவை நிராகரிக்கிறோம் என்ற மக்கள் கிராம சபை கூட்டம் நடைபெற்று வருகிறது.

நேற்று திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஏமப்பேர் நிர்குணம் ஆகிய ஊராட்சிகளில் ஒன்றிய கழக செயலாளர் பிரபு ஏற்பாட்டின் பேரில் மக்கள் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் கழக துணைப் பொதுச் செயலாளருமான பொன்முடி கலந்துகொண்டு பொதுமக்களிடம் மக்கள் குறைகளை கேட்டறிந்தார்.

அப்போது பேசிய பொதுமக்கள், தங்கள் பகுதிக்கு போக்குவரத்து வசதி, வாய்க்கால்களில் சிறு அணைக்கட்டு ஆகிய வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அதற்கு பதிலளித்துப் பேசிய பொன்முடி எம்.எல்.ஏ, “தமிழக மக்களுக்கு முறையாக நலத்திட்ட உதவிகள் கிடைக்க வேண்டுமானால் மீண்டும் தி.மு.க ஆட்சிக்கு வரவேண்டும் என மக்கள் எண்ணுகின்றனர்.

எனவே, இன்னும் நான்கு மாத காலத்திற்கு பிறகு தமிழகத்தை ஆளப்போவது தி.மு.கதான். அப்போது கிராமங்களில் அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதுடன் மீண்டும் மக்களுக்கு இலவச மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கிடைக்கும்” என பேசினார். நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் முருகன் ஒன்றிய செயலாளர் தங்கம், தலைமை செயற்குழு உறுப்பினர் செல்வராஜ் உள்ளிட்ட அவைத்தலைவர் முருகதாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

banner

Related Stories

Related Stories